விலங்குகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலங்குகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

Added : மார் 17, 2019
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள், நாள்தோறும் செல்கின்றன. இதன் வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், வாகனங்களை நிறுத்தி, மலைப்பாதை ஓரங்கள் அல்லது வனப்பகுதிக்குள் சென்று, புகைப்படம் எடுக்கின்றனர். கோடைகாலம் என்பதால், வனப்பகுதிகளில் தற்போது வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் தேடி புலி, யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள், வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த மாதிரி நேரங்களில், மனிதர்களை பார்க்க நேரிட்டால், ஆவேசத்துடன் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள், சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தக்கூடாது. குறிப்பாக புகைப்படம் எடுக்க கூடாது என்றும், வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X