பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் இதுவரை ரூ.10.94 லட்சம் பறிமுதல்

Added : மார் 17, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு உள்ளிட்ட குழுவினர், 24 மணி நேர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பணம் பறிமுதல் செய்கிறன்னர். சத்தியமங்கலத்தில், சாம்ராஜ் நகரை சேர்ந்தவரிடம், 64 ஆயிரம் ரூபாய்; வயநாட்டை சேர்ந்தவரிடம், 5.84 லட்சம் ரூபாய்; தாளவாடி, கல்மாண்டிபுரத்தில், ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில்லாமல், சத்தியமங்கலம், கோபி சாலையில் செந்தில்நாதன் என்பவரிடம், 70 ஆயிரம் ரூபாய்; சாம்ராஜ் நகர் பரமசிவமூர்த்தியிடம், 2.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருவர், உரிய ஆவணங்களை காட்டி, 2.34 லட்சம் ரூபாயை திரும்ப பெற்றனர். இதுவரை, 10.94 லட்சம் ரூபாய், ஈரோடு மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X