பொது செய்தி

தமிழ்நாடு

கொளுத்தும் கோடை வெயில்: தர்மபுரியில் நுங்கு விற்பனை ஜோர்

Added : மார் 17, 2019
Advertisement

தர்மபுரி: தர்மபுரி பகுதியில், கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால், நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கடந்த, சில நாட்களாக, 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் வெளியில் வராமல், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். உடல் சூட்டை தணிக்க, பழ வகைகள் குளிர்பானங்களை பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடை சீசன் துவங்கிவிட்ட நிலையில், தர்மபுரி நெசவாளர் காலனி அருகே, நுங்கு விற்பனை களை கட்டத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டை விட, விலை அதிகமாக இருந்தாலும், பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்கு வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, நுங்கு வியாபாரி சின்னசாமி கூறியதாவது: வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக, நடப்பாண்டு தர்மபுரி மாவட்டத்தில் நுங்கு விளைச்சல் குறைந்துள்ளது. ஒமலூர் பகுதியில் இருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறோம். இதனால், கடந்த ஆண்டு, நான்கு நுங்கு, பத்து ரூபாய்க்கு விற்ற நிலையில், இந்த ஆண்டு, மூன்று நுங்கு, பத்து ரூபாய் என, விற்பனை செய்கிறோம். விலை உயர்ந்திருந்தாலும், மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X