பொது செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

Added : மார் 17, 2019
Advertisement

தர்மபுரி: நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் பணியாற்றுவது, வி.வி., பேட் மின்னணு ஓட்டு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்து, மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், தர்மபுரியில் நேற்று நடந்தது. தேர்தல் அலுவலர், கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து பேசியதாவது: ஓட்டுச் சாவடி மையம் எவ்வாறு இருக்க வேண்டும், அதில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை அறிந்து, அதுபோலவே மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டல அலுவலர்கள் நல்ல முறையில் பயிற்சி எடுத்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளிக்க வேண்டும். மேலும், தர்மபுரி மாவட்டத்தில், வரும் ஏப்., 18ல், லோக்சபா தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கவுள்ளது. இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில், வாக்காளர்கள் இரண்டு ஓட்டுகளை அளிக்க வேண்டும். ஓட்டுப்போட வருபவர்கள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட, 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டுப் போடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X