பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிமுறை: போலீசாருக்கு அறிவுரை

Added : மார் 17, 2019
Advertisement

தர்மபுரி: தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்துவது குறித்து, போலீசாருக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம், சப் -கலெக்டர் சிவன் அருள் தலைமையில், தர்மபுரியில் நடந்தது. இதில், அவர் பேசியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் கடந்த, 10 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்த அனுமதி வாங்கும் முறை, பேனர், வேட்புமனு தாக்கல் செய்ய எவ்வளவு பேருக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து, ஏற்கனவே அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை அனைத்து போலீசாரும் கடைப்பிடித்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறாமல் பார்த்து கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யவேண்டும். சோதனை சாவடிகளில் பணியாற்றுபவர்கள், தங்கள் பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும், சோதனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X