பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: தி.மு.க.,- அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

Added : மார் 17, 2019
Advertisement

ஓசூர்: ஓசூரில், தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி, பொது இடத்தில் கட்சி விளம்பரம் செய்திருந்ததாக, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தல் மற்றும் ஓசூர் இடைத்தேர்தல் ஆகியவை அடுத்த மாதம், 18 ல் நடக்கிறது. கடந்த, 10 மாலை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், 72 மணி நேரத்திற்குள் சுவர் விளம்பரங்கள், பேனர், கட்சி கொடி போன்றவற்றை அகற்ற, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பல இடங்களில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்படவில்லை. குறிப்பாக, மூக்கண்டப்பள்ளி, ஓசூர் பஸ் ஸ்டாண்ட், ராயக்கோட்டை சாலை சந்திப்பு, சூளகிரி பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் சார்பில், அனுமதியின்றி வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் இருந்தன. இதையடுத்து, சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த, தி.மு.க., உறுப்பினர் சுரேஷ், 35, மீது சிப்காட் போலீசாரும், முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர் வாசுதேவன், 55, மற்றும் தி.மு.க., நகர பொறுப்பாளர் சத்யா, 46, ஆகியோர் மீது ஹட்கோ ஸ்டேஷனிலும், அ.தி.மு.க., நிர்வாகி சம்பங்கி மீது சூளகிரி போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X