பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையம்: தேர்தல் அலுவலர் ஆய்வு

Added : மார் 17, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை, தேர்தல் நடத்தும் அலுவலர், எஸ்.பி., ஆகியோர் பார்வையிட்டனர். கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக்கில், கிருஷ்ணகிரி லோக்பசபா தொகுதிக்கான ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறைகளையும், ஓட்டு எண்ணும் மையத்தையும், ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணும் மையத்தையும் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர், எஸ்.பி..,பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு செய்தனர். டி.ஆர்.ஓ., சாந்தி, ஆர்.டி.ஓ.,க்கள் கிருஷ்ணகிரி சரவணன், ஒசூர் விமல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கலெக்டர் கூறியதாவது: பாதுகாப்பு பெட்டக அறையில் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், வி.வி.,பேட் இயந்திரங்கள் வைக்கவும் இடம் தேவைப்படுகிறது. அதே போல், ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்திற்கான இடம் தேவைப்படுவதால், இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X