நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி

Added : மார் 17, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: ஓட்டுப் பதிவு இயந்திரம், மற்றும் வாக்காளர் தாங்கள் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பயன்பாடு, செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பதற்றமான ஓட்டுச் சாவடிகளை கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு ( மத்திய அரசின் பார்வை யாளர்கள்) பணி பொறுப்பாணை வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி மற்றும் ஓசூர் சட்டசபை இடைத்தேர்தல் யொட்டி, 187 மண்டல அலுவலர்கள், 187 மண்டல உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள், 136 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி, தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், பதற்றமான ஓட்டுச் சாவடிகளின் நிகழ்வுகளை முழுமையாக கண்காணித்து, தேர்தல் பொது பார்வையாளருக்கு ஓட்டுப்பதிவு முடிவு விபரம் குறித்து உரிய படிவத்தில், அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X