பொது செய்தி

தமிழ்நாடு

துணை ராணுவப்படையினர் அதிரடிப்படையினர் பாதுகாப்பு

Added : மார் 17, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், துணை ராணுவப்படையினர் மற்றும், அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தேர்தல் அதிகாரி கூறினார். கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், லோக்சபா மற்றும் ஓசூர் சட்டசபை இடைத்தேர்தல் ஓட்டுகள் எண்ணப்படவுள்ளன. ஓட்டு எண்ணும் மையத்தை, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரபாகர் மற்றும் எஸ்.பி., பண்டி கங்காதர் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் தேர்தல் அதிகாரி பிரபாகர் கூறியதாவது: மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, துணை ராணுவப்படையினர் மற்றும் ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படையினர் தேவை என, தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரம், பேலட் யூனிட் மட்டுமே இருந்தது. தற்போது ஓட்டுப் பதிவை சரி பார்க்கும் வி.வி.பேட் இயந்திரமும் உள்ளது. அதனால் இவற்றை 'ஸ்ட்ராங் ரூமில்' வைப்பதற்கு கூடுதல் இடம் தேவைப்படுவதால் அதற்கான இடம் பார்க்கப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்ற, 454 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. தற்போதுவரை, 427 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 27 துப்பாக்கிகளை ஒப்படைக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X