சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பர்கூர் அருகே லாரி மோதி மான் பலி

Added : மார் 17, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற புள்ளி மான், லாரி மோதி இறந்தது. பர்கூர் சுற்று வட்டாரத்தில் தொகரப்பள்ளி, வரமலை குண்டா காப்புக் காடு உள்ளது. இங்கு மான், கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், மான்கள் அடிக்கடி தண்ணீருக்காக கிராமத்திற்குள் வருகின்றன. நேற்று பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளி அருகே உள்ள காப்புக் காட்டில் இருந்து, ஆண் புள்ளி மான் ஒன்று தண்ணீரைத் தேடி கிராமத்திற்குள் வந்தது. சென்னை தேசிய நெடுஞ்சாலையை மான் கடக்க முயன்றபோது, கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி, அதன் மீது மோதியது. இதில் மான் அதே இடத்தில் பலியானது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி வந்த வனத்துறையினர், மான் உடலை அங்கேயே அடக்கம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X