சுவர் விளம்பரங்களை அழிப்பது எப்போது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுவர் விளம்பரங்களை அழிப்பது எப்போது?

Added : மார் 17, 2019
Advertisement

கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடவூர் தாலுகா அலுவலகம் அருகே, பாலத்தில் கட்சி விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தன. நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலம் அவை அழிக்கப்பட்டன. இருப்பினும், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்கள் கழற்றப்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. விளம்பரங்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்ற, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X