அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : மார் 17, 2019
Advertisement

அள்ளாத குப்பை; தீராத தொல்லை: கரூர் அருணாசலம் நகரில், ஆங்காங்கே பல இடங்களில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதை, நகராட்சி நிர்வாகம் சார்பில் நாள்தோறும் அகற்றுவது இல்லை. இதனால், அருணாசலம் நகர் முழுவதும், காற்றில் குப்பை பறந்தபடி உள்ளது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், பல நாட்களாக தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும்.
தண்ணீர் இல்லாத குடிநீர் தொட்டி: கரூர் வெங்கமேடு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மோட்டர் பழுது, நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது போன்ற காரணங்களால், தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவதில்லை. அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். இங்குள்ள பல சின்டெக்ஸ் தொட்டிகள் இதேபோல, பழுதாகி, தண்ணீர் இல்லாமல் உள்ளன. அவற்றை சரி செய்து, மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் படி, செய்ய வேண்டும்.

குழப்பும் போர்டு; தவிக்கும் பயணிகள்: கரூர் பஸ் ஸ்டாண்ட்டில் அருகே, கோவை சாலையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலைகளை குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழைய போர்டை அகற்றாமல், புதிய போர்டு வைக்கப்பட்டுள்ளது. இரண்டு போர்டுகளும் வெவ்வேறு திசைகளை காட்டுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் எந்த போர்ட்டை பார்த்து எங்கு செல்வது என தெரியாமல் குழப்பமடைகின்றனர். பழைய போர்ட்டை அகற்றி குழப்பத்தை தீர்க்க வேண்டும்.

போக்குவரத்துக்கு பயன்படாத சாலை: கரூர், வையாபுரிநகரில், தார்ச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இங்கு, ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ளதால், சாலையில் தினமும் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. குண்டும் குழியுமாக உள்ள சாலையை கடக்க முடியாமல், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். சரக்கு ஏற்றி வரும் போது, பள்ளத்தில் நிலை தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

சாலையோரம் வாகனம் நிறுத்தம்: கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மானோகரா கார்னர் ரவுண்டானா முதல், கோவை சாலை வரை, சாலையோரத்தில், ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இங்குள்ள வணிக நிறுவனங்களில் பார்கிங் வசதி இல்லாததால், வாடிக்கையாளர்கள் சாலையோரத்தில் கார்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இப்பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுப்பது வாடிக்கையாகிவிட்டது. போலீசார், 'நோ பார்க்கிங்' போர்டு மட்டும் வைத்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X