ராஜிவ் போட்ட பிச்சையால் தம்பிதுரை அரசியலில் இருக்கிறார்: காங்., நிர்வாகி காட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் போட்ட பிச்சையால் தம்பிதுரை அரசியலில் இருக்கிறார்: காங்., நிர்வாகி காட்டம்

Added : மார் 17, 2019
Advertisement

கரூர்: 'முன்னாள் பிரதமர் ராஜிவ் போட்ட பிச்சையால்தான், தம்பிதுரை பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார்' என, காங்., கட்சி கூட்டத்தில், நிர்வாகிகள் குமுறினர்.
கரூரில், முன்னாள் மாவட்ட, காங்., கட்சி தலைவர் சுப்பிரமணியத்தின் ஆதரவாளர்கள், நேற்று தனியே கூட்டம் நடத்தினர். அதில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த, 10 ஆண்டுகளாக தொகுதிக்கு சிறப்பு திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை என, விமர்சனம் செய்து பலர் பேசினர்.


அதை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் சின்னையன் பேசியதாவது: கடந்த, 1989 லோக்சபா தேர்தலில், தம்பிதுரைக்கு, ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை. அப்போது, காங்., கட்சி தலைவராக இருந்த ராஜிவ் தலையிட்டு, கரூர் தொகுதியை, தம்பிதுரைக்கு பெற்றுத் தந்தார். அவர் அன்று போட்ட பிச்சையால், தம்பிதுரை இன்று வரை, அரசியலில் உள்ளார். இல்லையென்றால், எப்போதோ காணாமல் போயிருப்பார். அதை மறந்துவிட்டு, அவர் காங்., கட்சியை விமர்சனம் செய்கிறார். வரும் தேர்தலில், கரூர் தொகுதியில் போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க வேண்டும். அதேபோல், காங்., கட்சி வழி வந்த, த.மா.கா., தலைவர் வாசன், ஒரு சீட்டுக் காக, பா.ஜ., காலில் விழுந்துள்ளார். அந்த துரோகியையும் தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X