பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவ மனையில் மருந்தாளுனர் பற்றாக்குறை

Added : மார் 17, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனையில், மருந்து மாத்திரை வழங்கும் பணியாளர் பற்றாக்குறையால், நோயாளிகள் மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் நிலையில் உள்ள, குளித்தலை அரசு மருத்துவமனையில், சுற்றுவட்டார பகுதி யில் உள்ள, 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும், 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு, மருந்தாளுனர்களாக மூவர் இருந்தனர். அதில், ஒருவர் கரூர் மருந்து குடோனுக்கு, தற்காலிகமாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால், ஒருவர் விடுப்பு எடுத்தால், ஒருவர் மட்டுமே மருந்து வழங்குவதால், மக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மருத்துவமனையில் ஐந்து பேர், பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது இரு பெண்கள் பணியில் இருப்பதால், கூடுதல் பணிச்சுமையால் தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X