குளித்தலையில் தேர்தல் விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலையில் தேர்தல் விழிப்புணர்வு

Added : மார் 17, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டு போடுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. லோக்சபா தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொதுமக்கள் எவ்வாறு ஓட்டுப்போட வேண்டும் என்பதையும், எந்த சின்னத்தில் ஓட்டுப்போட்டோம் என்பது, அருகில் உள்ள கண்காணிப்பு பெட்டியில் பதிவாகி உள்ளதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்தும் குளித்தலை நகராட்சி சார்பில், விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, குளித்தலை நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமை வகித்தார். பொதுமக்கள் ஒவ்வொருவராக வந்து மின்னணு இயந்திரத்தில் மாதிரி ஓட்டு போட்டு, அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்தனர். இதில், குளித்தலை யூனியன் கமிஷனர் ஆழ்வார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X