பொது செய்தி

தமிழ்நாடு

கொடிகம்பம் அகற்றுவதில் பாரபட்சமென பா.ஜ., புகார்

Added : மார் 17, 2019
Advertisement

நாமகிரிப்பேட்டை; லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பொது இடங்களில் கட்சி சின்னம், விளம்பரங்கள், கொடி கம்பங்கள் ஆகியவற்றை அகற்றவும், தலைவர்கள் சிலை, சின்னங்களை மறைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவற்றை அகற்ற கட்சி நிர்வாகிகளும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், நாமகிரிப்பேட்டையில், பா.ஜ., கொடி கம்பத்தை மட்டும், டவுன் பஞ்., ஊழியர்கள் அகற்றி குப்பையில் போட்டுவிட்டதாக, நகர, பா.ஜ., தலைவர் குமரவேல் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''கட்சி கம்பங்களை, நேற்று மாலைக்குள் அகற்றிக் கொள்கிறோம் என, கூறியிருந்தோம். ஆனால், மற்ற கட்சி கம்பங்கள் அப்படியே இருக்கும்போது, பா.ஜ., கொடி கம்பத்தை மட்டும் அகற்றி, கொடியுடன் குப்பையில் வீசிவிட்டனர்,'' என்றார். டவுன் பஞ்., நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, 'அகற்ற எளிதாக இருந்த கம்பங்களை உடனடியாக அகற்றிவிட்டோம். தி.மு.க., - தே.மு.தி.க., கொடி கம்பங்களை உயரமாக இருந்ததால், உடனடியாக அகற்ற முடியவில்லை. கிரேன் உதவியுடன், அகற்ற முடிவு செய்துள்ளோம். பாரபட்சம் எதுவும் இல்லை' என்றனர். இதையடுத்து, பிற கட்சி கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X