விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு சதவீதம்: பேச்சுவார்த்தையில் சங்கங்களிடையே முரண்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு சதவீதம்: பேச்சுவார்த்தையில் சங்கங்களிடையே முரண்பாடு

Added : மார் 17, 2019
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தை, இன்ஸ்பெக்டர் தலைமையில் நடந்தது. பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம், 2017ல் முடிந்து விட்டது. தொழிற்சங்கத்தின் சார்பில், 75 சதவீதம் கூலி உயர்வு உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல முறை பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படாததால், விசைத்தறி தொழிலாளர்கள், கடந்த ஜன, 28ல், 'ஸ்டிரைக்கில்' ஈடுபட்டனர். பிப்ரவரி, 6ல் நடந்த பேச்சு வார்த்தையில், 6 சதவீதம் தருவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால், தற்காலிமாக ஸ்டிரைக் திரும்பப் பெறப்பட்டது. இதன் பின், ஐந்து முறை பேச்சு நடத்தியும், இறுதி முடிவு எட்டப்படவில்லை. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி தலைமையில் பேச்சு நடந்தது. உரிமையாளர் சங்க நிர்வாகிகளும், தொழிற் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில், 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படுவதாக, உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்டு, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிற்சங்கத்தினர் கையெழுத்திட்டனர். மற்றொரு தொழிற்சங்கமான, ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள், ஒப்பந்தத்தை கண்டித்து வெளியேறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X