பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மேல்நிலைப் பள்ளி முன் வேகத்தடை அமைக்கப்படுமா?

Added : மார் 17, 2019
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அரசு பள்ளி முன், அசுர வேக வாகனங்களால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால், வேகத்தடை அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், கனரக, இலகுரக, இருசக்க வாகனங்கள், என எந்நேரமும் வந்த வண்ணம் உள்ளன. அவை, பீக்ஹவரில் அசுரவேகத்தில் வருகின்றன. இச்சமயங்களில், யாராவது சாலையை கடக்கமுயன்றால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், விபத்துகள் ஏற்படுகின்றன. மாணவ, மாணவியர் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். 'பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X