பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு: எஸ்.பி., சார்பில் பரிசு வழங்கல்

Added : மார் 17, 2019
Advertisement

எலச்சிபாளையம்: பள்ளி ஆண்டு விழாவில், மரக்கன்றுகளை நட்டு பராமரித்த மாணவர்களுக்கு, நாமக்கல் போலீஸ் எஸ்.பி., சார்பில் பரிசு வழங்கப்பட்டது. எலச்சிபாளையம் ஒன்றியம், மஞ்சநாயக்கனூர் ஊராட்சி துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ராஜவேல் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வசந்தி ஆண்டறிக்கை வாசித்தார். திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலர் ரமேஷ், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. விடுப்பு எடுக்காமல், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவருக்கு சான்றிதழும், கோப்பையும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விழாவில் பங்கேற்ற, நாமக்கல் எஸ்.பி., அருளரசு, மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரிக்கும் மாணவருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி, மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரித்த, ஐந்து பேருக்கும், ஆறுதல் பரிசாக, 10 பேருக்கும், எஸ்.பி., அருளரசு வழங்கியிருந்த புத்தகம், பரிசாக வழங்கப்பட்டது. பி.டி.ஏ., தலைவர் செல்லமுத்து, பள்ளி மேலாண் குழு தலைவர் ரேவதி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அல்லிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X