அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : மார் 17, 2019
Advertisement

பழுதடைந்த போர்வெல் சரி செய்யப்படுமா? மல்லசமுத்திரம் அடுத்த, அக்கரபட்டியில் உள்ள ஆழ்துளை குழாய் கிணறு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்துள்ளது. தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால் குடிப்பதற்கு போதிய குடிநீரின்றி பகுதியினர் அவதிப்படுகின்றனர். இதற்காக, நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. விலை கொடுத்தும் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆகவே, பழுதடைந்த மோட்டாரை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பயன்பாடற்ற குப்பை தொட்டி: பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூர் பஞ்., தாஜ்நகரில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது, தற்போது பயன்பாடு இல்லாமல், சாலையோரத்தில் சேதமடைந்து வருகிறது. காட்சிப் பொருளாக உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இதை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட பஞ்., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்: ப.வேலூர் அடுத்த, பிலிக்கல்பாளையம் பஸ் நிறுத்தத்தில் தினசரி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். அப்பகுதியில் நிழற்கூடம் இல்லாததால், வெயில், மழையில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. முதியவர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இருக்கைகளுடன் கூடிய பயணிகள் நிழற்கூடம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லாங்குழி சாலை சரி செய்யணும்! குமாரபாளையம் அருகே, கத்தேரி செல்லும் வழியில், அதிக எண்ணிக்கையில் பள்ளங்கள் உள்ளன. தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளதால், இந்த சாலையில் போக்குவரத்து அதிகம். இவ்வழியாக பள்ளி மாணவ, மாணவியர் சைக்கிளில் சென்று வருகின்றனர். ஆனால், மோசமான சாலையால், பலரும் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை பலனில்லை.

ஆபத்தான பள்ளம்; விபத்து அச்சம்: குமாரபாளையம் - இடைப்பாடி சாலை, வேதாந்தபுரம் வழியாக, நகராட்சி மயானம் செல்லும் பாலத்தின் நுழைவுப்பகுதியில், பெரிய பள்ளம் உள்ளது. இது திறந்த நிலையில் இருப்பதால், இரவு நேரங்களில் பலரும் வாகனத்துடன் விழுந்து காயமடைந்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பள்ளத்தை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X