பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாங்கித் தருவதாக மோசடி: போலீஸ் எஸ்.பி., எச்சரிக்கை

Added : மார் 17, 2019
Advertisement

நாமக்கல்: 'வேலை மற்றும் மருத்துவக் கல்லூரியில் படிப்புக்கான பணம் கொடுப்பது, வாங்குவது, உடந்தையாக இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் எஸ்.பி., அருளரசு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில், அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெறுவதற்கு, பணம் பெறப்படுகிறது. அதேபோல், மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பு சேர்வதற்கும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, இடம் பெறப்படுகிறது. இப்படி தொகை கொடுத்தும், வேலைவாய்ப்பு மற்றும் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லாமல், ஏமாறும் நிலை நீடித்து வருகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கின்றனர். இச்சம்பவம், தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

அதன் வழிகாட்டுதல்படி, நாமக்கல் எஸ்.பி., அருரளசு வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர்நீதி மன்ற வழிகாட்டும் நெறிமுறைகளின்படி, அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில், வேலைவாய்ப்பு பெறுவதற்காகவும், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ படிப்பில் சேர்வதற்காகவும், பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். அவ்வாறு பணம் கொடுத்தாலோ, பணம் பெற்றாலோ, அதற்கு உடந்தையாக இருந்தாலோ, பணம் கொடுப்பவர், வாங்குபவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X