லோக்சபா தேர்தல் விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தல் விழிப்புணர்வு பேரணி

Added : மார் 17, 2019
Advertisement

ப.வேலூர்: பரமத்தியில், தேர்தல் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆசியாமரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். லோக்சபா தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என்பன உள்ளிட்ட வாக்காளர் உறுதிமொழியை அவர் வாசித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்றனர். பி.டி.ஓ., அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் பிரதான சாலைகளில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகளிடையே, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தேர்தலில் ஓட்டுப்போடுவது குறித்து, விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேவிகாராணி, தாசில்தார் ருக்மணி, டி.எஸ்.பி., பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X