தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் போட்டியில்லை

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
லக்னோ : வரும் லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அக்கட்சியின் தலைவர்களான மாயாவதியும், அகிலேசும் போட்டியிட போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.அகிலேஷ், தனது மனைவி டிம்பிளுக்கு பதில் அவரது கன்னூஜ் தொகுதியில் போட்டியிடுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் சமாஜ்வாதியின் வேட்பாளர் பட்டியலில் கன்னூஜ் தொகுதி

லக்னோ : வரும் லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அக்கட்சியின் தலைவர்களான மாயாவதியும், அகிலேசும் போட்டியிட போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



அகிலேஷ், தனது மனைவி டிம்பிளுக்கு பதில் அவரது கன்னூஜ் தொகுதியில் போட்டியிடுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் சமாஜ்வாதியின் வேட்பாளர் பட்டியலில் கன்னூஜ் தொகுதி வேட்பாளராக டிம்பிள் அறிவிக்கப்பட்டார். பின்னர் அசாம்கர் தொகுதியில் அகிலேஷ் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அந்த தொகுதியையும் தனது தந்தை முலாயம் சிங்கிற்கு விட்டுக் கொடுத்தார் அகிலேஷ்.
இது குறித்து கட்சி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், கட்சியில் உள்ள நிபுணர்கள் சிலரின் அறிவுரையின் பேரிலேயே அகிலேஷ் போட்டியிடவில்லை. மாறாக முலாயம், டிம்பிள், கட்சியின் பிற வேட்பாளர்களுக்காக மட்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


latest tamil news





மாயாவதி பிரசாரம்


இதே போல் மாயாவதியும் முதலில் நகினா அல்லது அம்பேத்கார்நகரில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது பிரசாரம் மட்டும் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசாரத்திற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அவர் செல்ல வேண்டி உள்ளதால், தேர்தலில் போட்டியிட்டால் அது சிரமத்தை ஏற்படுத்தும் என கருதி, போட்டியிட வேண்டாம் என மாயாவதி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மாயாவதி, நாடு முழுவதும் சென்று சுமார் 30 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாயாவதி பிரசாரம் செய்ய உள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
17-மார்-201917:17:49 IST Report Abuse
Viswam இவங்க கூட்டணி அதிருது அப்படின்னு இப்படின்னு ஒரே பில்ட் அப். என்ன நடக்குதுன்னா மோடி யோகி ஜுரத்துனால தேர்தலையே உதறுற அளவுக்கு போயிட்டாங்க.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
17-மார்-201915:15:22 IST Report Abuse
Loganathaiyyan நாங்க எல்லாம் உள்ளூர் ரவுடிகள் எங்களாலே வெளியூருக்கு போய் அதாவது பார்லிமென்ட் போய் குப்பை கொட்ட முடியாது என்று சொல்கின்றார்கள் இவர்கள்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-மார்-201914:40:35 IST Report Abuse
அசோக்ராஜ் சோவ்க்கிதாரை ஜெயிக்கவே முடியாதுன்னு தீர்மானிச்சுட்டீங்களா? வடநாட்டு கள நிலவரமெல்லாம் உங்களுக்குத்தானே தெரியும் ? எங்க ஆசைக்கு நாங்க மோடி அவுட்டுன்னு சத்தம் போட்டு கத்திப்புட்டு பொள்ளாச்சி பக்கம் போயிடறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X