சென்னை: நாங்கள் ஜெயிப்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை. சிலர் ஜெயிக்கக்கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம் என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இன்று அவர் மேலும் கூறியதாவது: துணை பொதுசெயலாளர் மேகநாதன், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், ராமநாதபுரம், சிவகங்கை தொகுதியில் போட்டியிட துரையும், கோவையில் போட்டியிட சார்லசும் விருப்ப மனு அளித்துள்ளனர்.
விவேகமான சாணக்கியன்
சரத்குமார் அரசியலில் தனித்து நிற்கிறார். அவருக்கு யாரும் மதிப்பு அளிக்கவில்லை. நடிகர் கமல் கட்சியை துவக்கியுள்ளார். அவரும் தனித்து நிற்கிறார். ஜெயலலிதா சேர்த்த ஆதரவு இன்று வீணடிக்கப்படுகிறது.முன்பு நான் சத்ரியன் இப்போது நான் விவேகமான சாணக்கியன் , யோசித்து முடிவு எடுப்பேன். அதிமுக தரப்பிலும் என்னிடம் பேசப்பட்டது. சில உடன்பாடு கூறப்பட்டது. ராஜ்யசபா எம்பி., பதவி தருவதாக கூறினர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றனர். ஆனால் நான் ஏற்கவில்லை.

இயங்கி கொண்டிருந்தால் தான் இயக்கம். கூட்டணியை எண்ணி கொண்டிருந்தால் மயக்கம். இன்றைய அரசியலில் அறிவாளி, உழைப்பாளி, போராளி என நினைத்தால் ஏமாளியாகி விடுவர்.
திமுக, அதிமுக என்ற 2 கட்சியை நான் ஆட்டிப்படைப்பேன். கமல், சீமான் தனித்து போட்டியிடுகின்றனர். நாங்கள் ஜெயிப்பதற்காக நிக்கவில்லை. சிலர் ஜெயிக்க கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம். எதிரிகளுக்கு செல்லும் குறைந்தபட்சம் 100 ஓட்டுக்களையாவது சிதற வைப்பதற்கு எனக்கு பலம் இருக்கிறது. இவ்வாறு ராஜேந்தர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE