லோக்பால் தலைவர் நியமனம்: ஹசாரே வரவேற்பு| Dinamalar

லோக்பால் தலைவர் நியமனம்: ஹசாரே வரவேற்பு

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (25)
Advertisement

புதுடில்லி: அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குறித்து விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி பினாகிசந்திரா ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான நியமனக்குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.



கடந்த 2014 ல் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் நியமனம் செய்ய வேண்டிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிரதமர் தலைமையிலான குழு முடிவு செய்யும். இந்தக்குழுவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி , சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் அடங்குவர். விரைவில் தலைவர் நியமிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தி இருந்தது.
இந்த குழு பல ஆண்டுகளாக சரியான நபரை தேர்வு செய்வதில் கால அவகாசம் ஏற்பட்டது. இந்நிலையில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி பினாகிசந்திரா ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகலாம்.



வரவேற்பும், எதிர்ப்பும்.,


லோக்பால் அமைப்பு நியமனம் காலதாமதமானது என காங்., கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜூன் கார்கே குறைகூறியுள்ளார். மேலும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் இது முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தேர்தலுக்கானது என இந்திய கம்யூ. ,கட்சி தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, இது மகிழ்ச்சியானது , ஊழலை ஒழிக்க உதவும். ஊழலை வெளிக்கொணர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரி கவர்னர் கிரன்பேடி , இது மிக வரவேற்புக்குரியது. வரலாற்று முக்கிய நாள், இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறும் விஷயம் என கூறியுள்ளார்.





வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
17-மார்-201921:33:31 IST Report Abuse
K.n. Dhasarathan காலம் கடந்த செயல் மோடிஜி மக்கள் தேர்தல் நேரத்தில் உங்களுடைய வேகத்தை கண்டு மிரண்டுதான் போனார்கள், ஆனாலும் காலம் கடந்துவிட்டது. உங்களுக்கான கதவு மூடப்பட்டுவிட்டது. அடுத்த தேர்தலில் முடிந்தால் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
LOGANATHAN - new jerssy,யூ.எஸ்.ஏ
17-மார்-201920:33:50 IST Report Abuse
LOGANATHAN இது எல்லாம் கண் துடைப்பு . கற்பழிக்கும் பொது மனிதன் மீதே நடவடிக்கை இல்லை . இவர்களும் இவர்கள் அரசியலும். மக்களே முன் வந்து தண்டனையை கொடுக்க வேண்டும். போலிசியையும், அரசியல் வாதிகளையும் நம்பி பயனில்லை.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
17-மார்-201919:56:24 IST Report Abuse
GMM லோக்பால் விசாரணை முறையில் மாற்றம் வேண்டும். சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினால், குறைகள் தெரியும். ராஃபில் விமான வழக்கில் முதலில் ஆவண திருட்டு. பின் பிற இனங்கள். சரியான முடிவு. நில மோசடி வழக்கில் Rs.10 lakhs பண பரிமாற்றம்/கிரயம்.Rs. 50000 மேல் வங்கி கணக்கு மூலம் பரிவர்த்தனை அவசியம். Cash receipt அவசியம். வழக்கு தாக்கல் செய்த பின் பத்திர பதிவு செல்லாது என தீர்ப்பது இல்லை. தவறான ( அதிக கட்டணம், ரசீது இன்றி வக்காலத்து, தவறான முறையில் வாதம்....) வக்கீல்களை நீதிமன்றம் தண்டிக்கும் முறை வேண்டும். இல்லாவிடில், லோக்பால் போதாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X