அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணமூட்டை அரசியல் வெற்றி பெறாது: தினகரன்

Added : மார் 17, 2019 | கருத்துகள் (26)
Advertisement
தினகரன், Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன்

சென்னை: பணமூட்டை அரசியல் வெற்றி பெறாது என அமமுக கட்சி தலைவர் தினகரன் கூறியுள்ளார். இவர் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை 22 ம் தேதி அறிவிக்கப்படும். பயில்வான்கள் கொண்ட பண மூட்டை கூட்டணி அமைந்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் மதிப்பு இல்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தலைமையில் இயங்கிய இயக்கம். துரோக கும்பல், இரட்டைத்தலை பாம்பு கையில் சிக்கி இருக்கிறது. தொகுதி பங்கீடு என ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கி வருகின்றனர்.
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். பண மூட்டை கூட்டணி வெற்றி பெறாது. பித்தலாட்டத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க அஞ்சி வழக்கு போட்டனர். தேர்தலை கண்டு பலர் அஞ்சி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போட்டியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களிடம் அநுபவம் உள்ளவர்கள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேனி லோக்சபாவில் நான் நின்றாலும் நிற்பேன். நோட்டாவுடன் போட்டியிடும் தமிழிசைக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
18-மார்-201917:09:22 IST Report Abuse
natarajan s This is nothing but THE POT CALLING THE KETTLE BLACK > இவர்களால் இவர்களது பணத்தாசைக்கு எவ்வளவு பேர் பலியாகி இருப்பார்கள் அவர்களது பாவம் சும்மா விடுமா? எப்படி இருந்தவர்கள் இப்பொது எப்படியோ ஆகிவிட்டார்கள். நமது மக்களின் கண்முடித்தனமான நம்பிக்கையால் (MGR AMMA மீது )இவர்கள் வளம் பெற்றார்கள்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
18-மார்-201908:41:08 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சுத்தமான ஆளுவரான சொம்பைகொண்டுபோயி உள்ளே வைன்னாப்பாலை இல்லே இருக்கு என்னாத்துக்கு குக்கர் குர்=தூக்குறானுக்கோ வீட்டுலே நெறையவாங்கிவச்சிருக்கானுகளோ இந்தாளுக்கு ஓட்டுபோடுறவனெல்லாம் மம் மொள்ளமாரியாவேதான் இருப்பானுக
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-மார்-201908:19:30 IST Report Abuse
Srinivasan Kannaiya பணமூட்டை அரசியல் வெற்றி பெறாது என அமமுக கட்சி தலைவர் தினகரன் கூறியுள்ளார். அடடே அவரை பற்றி அவரே சொல்லிக்கொள்ளுகிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X