அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குளத்தில் சிக்குமா மீன்?
ஆசையில் காத்திருக்குது அறிவாலய கொக்கு

'தில்லுமுல்லு கட்சி' என, பிரேமலதா கடுமை யாக விமர்சித்ததால், தி.மு.க., தலைமை, கடும் அதிருப்தி அடைந்துள்ளது. தே.மு.தி.க.,வுக்கு பாடம் புகட்டும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் ரகசிய முயற்சியில், தி.மு.க., ஈடுபட்டு உள்ளது.

குளத்தில்,சிக்குமா,மீன்?,ஆசையில்,காத்திருக்குது,அறிவாலய கொக்கு

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய, தே.மு.தி.க., பேச்சு நடத்தியது; உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது. இந்த நேரம் பார்த்து, அமெரிக்காவில் இருந்து, சிகிச்சை முடிந்து திரும்பிய, விஜயகாந்தை சந்தித்து, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், உடல் நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு, தி.மு.க., பக்கமும், கூட்டணி பேச்சை துவக்க, தே.மு.தி.க.,வுக்கு பெரிதும் உதவியது.

ஆனால், தே.மு.தி.க.,வின், தனிப்பட்ட கோரிக்கைகளை, தி.மு.க., ஏற்கவில்லை. அதே நேரம், 'எங்களுக்கு, தி.மு.க.,வில் வரவேற்பு உள்ளது' எனக்கூறி, அ.தி.மு.க.,வில், அதிக இடங்கள் பெற,தே.மு.தி.க., பேரம் நடத்தியது; அதுவும் எடுபடவில்லை.இந்நிலையில், தி.மு.க., பொருளாளர், துரைமுருகனை, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் இருவர், திடீரென சந்தித்தனர். 'கூட்டணி பேச வந்தனர்; இடமில்லை என, அனுப்பி விட்டேன்' என,

துரைமுருகன், 'கொளுத்தி' போட்டார். இது, தே.மு.தி.க.,வுக்கு, அரசியல் ரீதியாக மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, விஜயகாந்த் மனைவி, பிரேமலதா, தி.மு.க.,வை, 'தில்லுமுல்லு கட்சி' என, காரசாரமாக விமர்சித்தார். இதனால், இரு தரப்பினர் இடையேமோதல் அதிகமானது. இந்த விவகாரங்களால், தே.மு.தி.க., மீது, அறிவாலய தலைமை, கடும் கோபத்தில் உள்ளது.அதனால், தே.மு.தி.க.,வை சேர்ந்த, முக்கிய பிரமுகர்களை இழுக்கும் முயற்சியை துவக்கி உள்ளது. பிரேமலதா, சுதீஷ் ஆதிக்கம் பிடிக்காமல், முக்கிய நிர்வாகிகள் சிலர், ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு வலை விரிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

தி.மு.க.,வின் வலையில், சேலத்தை சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவரும், விழுப்புரம், சென்னை மாவட்டங்களை சேர்ந்த, மாவட்ட நிர்வாகிகளும் சிக்கி உள்ளனர். விழுப்புரம், வட சென்னை தொகுதிகளில், பிரசாரத்திற்கு ஸ்டாலின் செல்லும்போது, இவர்களை கட்சியில் இணைக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது, தே.மு.தி.க., வரவை, தி.மு.க., பெரிதும் விரும்பியது. எப்படியாவது ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்ற திட்டத்தில் இருந்த கருணாநிதி,'பழம் நழுவி பாலில் விழுந்தது' என்றெல்லாம் பேசி, தே.மு.தி.க.,வை குளிர வைத்தார். ஆனாலும், அக்கட்சி மசியாமல், கருணாநிதி அழைப்பை மதிக்காமல், மக்கள் நல கூட்டணியில் போய் சேர்ந்தது.

அதனால், ஏற்பட்ட வெறுப்பை மறக்காத, தி.மு.க.,

Advertisement

தலைமை, அக்கட்சியை உடைக்க முயற்சித் தது. அதில், தே.மு.தி.க.,வை சேர்ந்த, அப்போதைய, எம்.எல்.ஏ.,க்கள், சந்திரகுமார், சேகர், பார்த்திபன் ஆகிய மூவரை, தங்கள் பக்கம் இழுத்தது.அவர்கள் வாயிலாக, தே.மு. தி.க., நிர்வாகிகள் சிலரும், தி.மு.க., பக்கம் வரவழைக்கப்பட்டனர். 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டி யிட, கட்சி மாறி வந்தவர்களுக்கு வாய்ப்பும் அளித்தது. அதில், அவர்கள் தோற்று போனாலும், தி.மு.க., பதவிகளில் நீடிக்கின்றனர்.

அதேபோன்ற அதிரடியை, இப்போதும் காட்ட, தி.மு.க., தயாராகி வருவதாக, தே.மு.தி.க., காதுக்கு செய்தி வந்துஉள்ளது. அப்போது, விஜயகாந்த் தெம்பாக இருந்ததால், கட்சிக்கு
ஏற்படவிருந்த பெரிய சேதாரத்தை தடுக்க முடிந்தது. தற்போது, கட்சியின் நிலைமை,
அவ்வளவு சிறப்பாக இல்லாததால், தி.மு.க., முயற்சியை முறியடிப்பது எப்படி என, வழி தேடுகிறது.முதல் கட்டமாக, அதிருப்தியில் உள்ளோரை அழைத்து, சமாதானப்படுத்தும் முயற்சியில், தே.மு.தி.க., தலைமை இறங்கி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மார்-201913:16:27 IST Report Abuse

Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM )திமுக எந்த கட்சியை வாழ விடாது தனது பணபலத்தால் சீர் குலைத்து விடும்.

Rate this:
thamodaran chinnasamy - chennai,இந்தியா
19-மார்-201903:17:16 IST Report Abuse

thamodaran chinnasamyஇந்திய அரசியல் தரத்தை குறைத்த சீமான்கள் இவர்களின் கூட்டமே.

Rate this:
thamodaran chinnasamy - chennai,இந்தியா
19-மார்-201903:10:56 IST Report Abuse

thamodaran chinnasamyஅதென்ன அறிவாலய தலைமை , அறிவும் தலைமைப்பண்பும் இல்லாதவனுங்க தான் இவனுங்க. தயை கூர்ந்து இது போன்ற அருமை மிகுந்த நல்ல தமிழ் சொற்களை இந்த கூட்டத்திற்கு பயன் படுத்தாதீர்கள். மொழியையும் மக்களையும் கேடயமாக வைத்து இவர்கள் செய்த இனத்ததுரோக செயல்களை தமிழ் இருக்கும் வரை தமிழ் இனம் இருக்கும் வரை எந்த ஒரு தமிழ் கற்றறிந்த பண்பாளனாலும் ஏற்க இயலாது. தமிழா இப்பொழுதேனும் விழித்திடு , தமிழன் வாழ தமிழ் தாய் வாழ . நன்றி . நன்றி நன்றி .

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X