எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத வெறி எடுபடாது!
மத வெறி பிரசாரம் எடுபடாது தமிழக பா.ஜ.,
பொதுச்செயலர் வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி


ஊழலுக்கு எதிரானது, பா.ஜ., எனக்கூறி விட்டு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது, நெருடலாக இல்லையா?
தேர்தல் கூட்டணி என வரும் போது, யார் ஜெயிக்க வேண்டும்; யார் கையில், ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற, கேள்வி எழுகிறது. எனவே, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஒவ்வொரு கட்சியின் விமர்சனமும், ஒருபுறம் வைக்கப்பட்டு, மற்றொருபுறம் தேர்தல் வெற்றி, குறிக்கோளாக மாறி விடுகிறது.

 மத வெறி, பிரசாரம், எடுபடாது, தமிழக, பா.ஜ., பொதுச்செயலர் வானதி சீனிவாசன், சிறப்பு பேட்டிதேர்தல் வெற்றிக்காக, சமரசம் செய்து கொள்கிறீர்கள். அப்படி தானே?சமரசம் என்பதை ஏற்கவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும், ஒரு கொள்கை, தனிப்பாதை உள்ளது. தேர்தல் கூட்டணி, பல்வேறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிற விஷயம். குறைந்தபட்ச செயல் திட்டத்தை நிறைவேற்றுகிற அடிப்படையில், கூட்டணி அமைகிறது.


கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையில், கூட்டணி அமைத்து விட்டு, தற்போது, வேறு கட்சி தலைமையில் இணைந்துள்ளீர்கள்; இது, கட்சிக்குசரிவில்லையா?
தேசிய கட்சியான, பா.ஜ., மூன்றாவது அணியை உருவாக்கியது. இன்று, அந்த கூட்டணியில் இருக்கிற பலத்தை விட, கூடுதலாக, ஒரு கட்சி சேர்ந்துள்ளது. இதை, பலமாகவே பார்க்கிறோம்.


பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, தே.மு.தி.க., பேச்சு நடத்திய நிலையில், அக்கட்சியை விட்டு விட்டு, நீங்கள் அவசரமாக, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தது ஏன்?

தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., இல்லை. கடந்த சட்ட சபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணிக்கு சென்றது. பேச்சு, பல கட்டமாக நடத்தப்பட்டது. இன்று, அனைவரும் இணைந்து, மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது.


தமிழகத்தில், மோடிக்கு எதிரான குரல் அதிகம் ஒலிக்கிறதே?எங்கும் ஒலிக்கவில்லை. சில ஊடகங்களும், சில அரசியல்வாதிகளும், அவ்வாறு ஒலிக்க முயற்சிக்கின்றனர்.தமிழகத்தில், கோஷ்டி பூசலால் தான், பா.ஜ., வளரவில்லை என்று கூறப்படுகிறதே?
குடும்பத்தில், கணவன் - மனைவி பிரச்னை

இருப்பது போல, ஒரு கட்சியாக இணைந்து செயல்படும்போது, கருத்து வேறுபாடுகள் வரும். அதை, எப்படி எடுத்து செல்கிறோம் என்பது முக்கியம். தமிழக, பா.ஜ.,வில், கோஷ்டி பூசல் கிடையாது. அனைவரும் ஒன்றிணைந்து, பல நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். கோஷ்டி பூசல்என்பதில், எவ்வித உண்மையும்கிடையாது.


உங்கள் கூட்டணிக்கு இணையாக, தி.மு.க., பலமான கூட்டணி அமைத்துள்ளதே?

அது, பலமான கூட்டணி இல்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பலமான கூட்டணி அமைத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். அது, இன்று தலைகீழாக மாறி உள்ளது. அது, சந்தர்ப்பவாத கூட்டணி. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, பலம் இல்லை. அவை, ஒப்புக்கு சப்பாணிகளாக உள்ளன.


இந்த நாடுயாருடைய பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு, மக்கள் ஓட்டளிக்க உள்ளனர். உலக அளவில், இந்தியாவின் மதிப்பை, மோடி உயர்த்தி உள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டின் செயல்பாடு எப்படி இருந்தது; இந்த, ஐந்து ஆண்டுகளில், நாட்டின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை, எங்களால் பட்டியலிடமுடியும். எனவே, மோடி, மீண்டும்பிரதமராவது உறுதி.


காவிரி விவகாரம், 'நீட்' நுழைவுத் தேர்வு போன்றவற்றில், தமிழகத்திற்கு எதிரான நிலையை, பா.ஜ., அரசு எடுத்த தாக குற்றம்சாட்டப் படுகிறதே?
இல்லை. 'நீட்' தேர்வை பொறுத்தவரை, ஓராண்டு நீட்டிப்பு கொடுக்க,மத்தியஅரசு முடிவு செய்து, முயற்சி மேற்கொண்டது. நீதிமன்றத்தில் நடந்த தவறு, மாநில அரசில் ஏற்பட்ட குழப்பம் போன்றவற்றால், அது நடக்காமல் போய் விட்டது. அதன்பின், நீட் தேர்வால், தமிழக மாணவர்களுக்குஏற்பட்டுள்ள பலனை பார்த்துள்ளோம்.


நுாறு ஆண்டுகளாக உள்ள, காவிரி பிரச்னைக்கு, மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது. ஒருபோதும், தமிழகத்திற்கு எதிராக, பா.ஜ.,வோ, மோடியோ இல்லை. மோடி வந்தபோது, அரசியல் கட்சிகள், அநாகரிக முறையில், கறுப்பு கொடி காட்டியபோதும், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து உள்ளார்.மதுரைக்கு, எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பூருக்கு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை கொடுத்துள்ளார். மீனவர்கள் பிரச்னை, இலங்கை பிரச்னை என, நீண்ட கால பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


அதை பார்க்காமல், 'கோ பேக் மோடி' என, சமூக வலைதளங்களில், 'டிரெண்டிங்' செய்தனர். அதில் பங்கேற்றவர்கள், தமிழக மக்கள் இல்லை என்பது, தற்போது தெரிந்துள்ளது. பிரதமர் மோடியை, தமிழகத்திலிருந்து அன்னியப்படுத்தி காட்ட நடந்த முயற்சி, தோல்வி அடைந்துள்ளது.


'கஜா' புயல் பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் வராதது ஏன்?

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களத்தில் இருந்தார். ஒரு வாரத்திற்குள், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், நிவாரணமாக வழங்கப்பட்டன. ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். இரண்டு நாட்கள், மக்களோடு இருந்து பணியாற்றினார். தேவையான உதவிகளை,மத்திய அரசு செய்தது. பார்வையிட

Advertisement

வரவில்லை என கூறுவோர், உதவி செய்ததை பார்க்கவில்லை.


நிர்மலா சீதாராமன் தலைமையில், நீங்கள் தனி கோஷ்டியாக செயல்படுவதாக கூறப்படுகிறதே?எந்த உண்மையும் இல்லை. அவர், கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தபோது ஏற்பட்ட நட்பு. அவர் வழியே, தமிழகத்திற்கு, நிறையநன்மைகள் நடந்துள்ளன.திருப்பூரில், சாய சுத்திகரிப்பு ஆலை அமைக்க உதவினார். ராணுவ தளவாடங்களுக்கான, ஆராய்ச்சி மையம், கோவையில் அமைய உதவினார். மீனவர் பிரச்னை, 'ஒக்கி' புயல் மீட்பு நடவடிக்கை என, அனைத்திற்கும் உதவினார். தி.மு.க., - காங்., அமைச்சர்கள் செய்யாததை, அவர்தமிழகத்திற்கு செய்து கொடுத்துள்ளார்.


பா.ஜ.,வை மதவெறி கட்சி என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?காஷ்மீரில், கூட்டணி ஆட்சி அமைத்தோம். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும், வட கிழக்கு மாநிலங்களிலும், ஆட்சி அமைத்துள்ளோம். மத வெறி என்பது, இனி மக்களிடம் எடுபடாது.


வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள, கறுப்பு பணத்தை மீட்போம் என்பது உட்பட, பல கோரிக்கைகளை,பா.ஜ., அரசு நிறைவேற்றவில்லையே?

கறுப்பு பணம் மீட்பு நடவடிக்கையை, மத்திய அரசு மேற்கொண்டது. சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. சுவிட்சர்லாந்து அரசு, முதலீடு செய்தவர்கள் விபரத்தை தெரிவிக்க முன்வந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு, வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளதால், ஏழைகளுக்கு, அரசு பணம் நேரடியாக சென்றடைகிறது. வரி ஏய்ப்பு செய்தவர்கள் திணறி கொண்டிருக்கின் றனர். கறுப்பு பணம் ஒழிப்பில், மிகப்பெரிய மாற்றம் நடந்து வருகிறது.தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி எப்படி உள்ளது?


நல்ல ஆட்சியை இங்கேயும், அ.தி.மு.க., கொடுக்கும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு உள்ளது.'கோ பேக் ராகுல்' திட்டமிட்டு பரப்பப்பட்டதா?
தானே வந்தது; நாங்கள் திட்டமிடவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மார்-201908:46:38 IST Report Abuse

J.V. Iyer'கஜா' புயல் பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் வராதது ஏன்? - முந்தைய புயல்களுக்கு எத்தனை பிரதமர்கள் வந்தார்கள் என்று கூறமுடியுமா? சௌகரியமாக இதை மறந்துவிட்டு மோடிஜிமேல் பழி போடுவது கூத்துதான். உங்களுக்கு உதவி முக்கியமா? சும்மா பாத்துட்டு போனால் போதுமா?

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
18-மார்-201918:12:49 IST Report Abuse

PANDA PANDIதாமரை எப்போது மலரும். பகலிலா இரவில. மலரும்போது இலையும் பழவும் எங்கே இருக்கும் சொல்லுங்கள்.

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
18-மார்-201917:45:36 IST Report Abuse

தமிழ்மைந்தன் அட ஊழல்தலைவரின் மகன் போல எழுதி கொடுத்ததை மட்டுமே சொல்லவில்லை......

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X