பொது செய்தி

இந்தியா

'மிஸ்டர் கிளீன்' முதல்வர்!

Updated : மார் 17, 2019 | Added : மார் 17, 2019 | கருத்துகள் (30)
Advertisement
ManoharParrikar,Manohar Parrikar Ji,Om Shanti,Goa CM,Goa Chief Minister,Rest In Peace,CM of Goa,Minister of GOA,Defence Minister,பரீக்கர்

பனாஜி: இந்திய அரசியல் வரலாற்றில் ஐ.ஐ.டி., யில் படித்து, முதல்வரான முதல் அரசியல்வாதி மனோகர் பாரீக்கர். நான்கு முறை கோவா முதல்வராக இருந்தார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கோவாவில் 1955 டிச., 13ல் பிறந்தார். அங்குள்ள லயோலா பள்ளியில் படித்தார். 1978ல் மும்பை ஐ.ஐ.டி.,யில் உலோகவியல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பின் சொந்த ஊருக்கு திரும்பி வியாபாரத்தில் ஈடுபட்டார். 1988ல் பா.ஜ., வில் இணைந்தார்.


1994ல் கோவாவின் இரண்டாவது சட்டசபை தேர்தலில் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். 1999ல் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2000ல் முதன் முறையாக கோவா முதல்வரானார். 2012ல் இரண்டாவது முறையாகவும், 2012ல் மூன்றாவது முறையாகவும் முதல்வரானார். இவரது மனைவி மேடா பாரிக்கர், 'கேன்சரால்' 2000ல் மரணமடைந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.ஊழலற்ற ஆட்சிமுதல்வரானவுடன் கோவாவில் 14 'மெகா' பாலங்கள், சாலை வசதிகள், கோவா மருத்துவக் கல்லுாரியை விரிவுபடுத்தியது என அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினார். சர்வதேச திரைப்பட விழாவை(ஐ.எப்.எப்.ஐ.,) கோவாவுக்கு கொண்டு வந்தார். பால் உற்பத்தியை பெருக்கும் 'காமதேனு' திட்டத்தை செயல்படுத்தினார். முதியோர் உதவித்தொகை, மாணவர்களுக்கான வட்டியில்லாக் கல்விக் கடன் வசதியை ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு லேப்டாப், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற சலுகைகளை வழங்கினார். கோவாவின் 'மிஸ்டர் கிளீன்' என அழைக்கப்பட்ட இவர், மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை கொண்டு வந்து, ஊழலற்ற ஆட்சிக்கு வழிவகுத்தார்.


பாதுகாப்பு:

இவரது திறமையை அறிந்த பிரதமர் மோடி, 2014 நவ., 9ல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக்கினார். இவரது பதவிக்காலத்தில் பாக்., பயங்கரவாதிகள் மீது 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தப்பட்டது. 2017 மார்ச் 14ல் கோவாவில் பா.ஜ., ஆட்சியை தக்க வைப்பதற்காக, பா.ஜ., தலைமை மீண்டும் இவரை கோவா முதல்வராக்கியது. 2018, மார்ச்சில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இவர், இன்று மார்ச் 17, 2019ல் காலமானார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-மார்-201903:23:14 IST Report Abuse
meenakshisundaram நல்ல திறன் ,கடைமையில் குறி,அடக்கத்தன்மை .அரசியலில் இதே போன்ற நல்ல நிர்வாகிகளே தேவை .நம்மிடமிருந்து ஆண்டவன் விரைவில் இவரை பிரித்தது கொடுமை கிரிமினல்கள் நூறு வருஷங்கள் இருக்கானுங்க இதுவே God is prejudiced ' என்று சிலர் சொல்வதன் முழு அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
19-மார்-201904:20:15 IST Report Abuse
Vetri Vel 2017 மார்ச் 14 .. ஒரு நல்ல மனிதரின் போதாத காலம்... தொடங்கிய நாள்...
Rate this:
Share this comment
Cancel
Advaiti - Chennai,இந்தியா
18-மார்-201917:04:35 IST Report Abuse
Advaiti நல்லா இருக்கும்போதே 2 - 3 மணி நேரம் கட்டில், மெத்தை, சுத்தி மின் விசிறிகள், ஏசின்னு வெச்சிகிட்டு பீச்ல இனத்தை காக்கறேன்னு டில்லில அவங்க கூட்டணி அரசு இருக்கும்போதே குடும்ப சுயநல லாப அரசியல் செஞ்ச பாரங்களா இருந்த இந்த மண்ணுல உயிர் போகும் வியாதி இருக்கும்போதும் தேசமே முக்கியம்னு தன் நலத்தை தியாகம் செய்து வாழ்ந்து எப்படி தலைவன், தேச பக்தன் இருக்கணும்னு காமிச்சிட்டு போயிருக்கார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X