பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தேர்வு?
லோக்பால் தலைவராக பி.சி.கோஷ்...
மேல்மட்ட ஊழலை ஒழிக்க அதிரடி

புதுடில்லி:பிரதமர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் உட்பட, உயர் பதவியில் உள்ளோர் தொடர்பான ஊழல்களை விசாரிக்கும், லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பினாகி சந்திர கோஷ், 66, நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அறிவிப்பு, விரைவில் மத்திய அரசால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்பால், தலைவராக,பி.சி.கோஷ்...,தேர்வு? ,மேல்மட்ட ஊழலை, ஒழிக்க ,அதிரடி

'எம்.பி.,க்கள், அரசு உயரதிகாரிகள் உட்பட, உயர் பதவியில் உள்ளோர் தொடர்பான ஊழல்களை விசாரிக்க, லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை, நீண்ட காலம் நிலுவையில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவீடனில் பின்பற்றப்படும் நடைமுறைப்படி, இந்தியாவில் லோக்பால் அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.இந்த அமைப்பு, தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர்களுடன் செயல்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், லோக்பால் அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுக்க, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அடங்கிய தேர்வுக்குழு, சமீபத்தில் கூடி ஆலோசித்தது.அந்த கூட்டத்தின் இறுதியில், லோக்பால் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.சி.கோஷை தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.


லோக்பால் அமைப்பின் எட்டு உறுப்பினர்கள்

குறித்தும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, ஓரிரு நாளில், லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் அதன் எட்டு உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்பால் அமைக்கப்படாததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, இம் மாத இறுதியில் விசாரிக்கப்பட உள்ளது. அதற்கு முன், லோக்பால் அமைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.லோக்பால் அமைப்பின் முதல் தலைவர் பொறுப்புக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், பி.சி.கோஷ், உச்ச நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியவர். 2017, மே மாதம் அவர் பணி ஓய்வு பெற்றார்.

தற்போது, தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பின ராக அவர் செயல்பட்டு வருகிறார்.லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால், உயர் பதவிகளில் உள்ளோருக்கு எதிராக, புகார்கள் அளிக்க வழி ஏற்படும்.இதனால், உயர் பதவிகளில் இருப்போர், ஊழலில் ஈடுபடுவது, கணிசமாக குறையும் என, கூறப்படுகிறது.


5 ஆண்டுகளுக்கு பின்...
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் குறித்த அறிவிப்பு, மத்திய அரசால், 2014 துவக்கத்தில், அரசிதழில் வெளியிடப்பட்டது. இருப்பினும், லோக் பால் அமைப்புக்கு இதுவரை, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வில்லை. இதை எதிர்த்து, 'காமன் காஸ்' எனப்படும் அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோக்பால் அமைப்புக்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும்படி, மத்திய அரசுக்குஉத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்துவதில் மத்திய அரசு தாமதம் செய்த தால், கோபம் அடைந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சமீபத்தில், மத்திய அரசை கடுமையாக சாடினர்.லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், ஐந்தாண்டுகளுக்கு பின், தற்போது, லோக்பால் அமைப்புக்கு தலைவர்

Advertisement

மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹசாரே வரவேற்பு

மஹாராஷ்டிராவை சேர்ந்த, பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே கூறியதாவது: லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, பி.சி.கோஷ் நியமிக்கப்படுவதாக செய்தி கிடைத்துள்ளது. இந்த முடிவை மனதார வரவேற்கிறேன். லோக்பால் அமைக்க, 48 ஆண்டுகளாக நடந்து வந்த மக்கள் போராட்டத் துக்கு, இதன் மூலம் வெற்றி கிடைத்து ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.'லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தி, உண்ணாவிரதம் உட்பட, பல்வேறு போராட்டங்களை, ஹசாரே நடத்தியது குறிப்பிடத்தக்கது.


பிரதமரையும் விசாரிக்கலாம்!

லோக்பால் சட்டப்படி, பிரதமர், மத்திய அமைச்சர், பார்லிமென்ட் உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை, லோக்பால் விசாரிக்கும். மேலும், வெளிநாட்டில் இருந்து, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெறும் அரசு சாரா அமைப்புகளின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரமும், லோக்பாலுக்கு உண்டு. சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துடன் சேர்ந்து, லோக்பால் செயல்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்க, சி.பி.ஐ., போன்ற விசாரணை அமைப்புகளுக்கு, லோக்பால் உத்தரவிட முடியும்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
18-மார்-201918:29:04 IST Report Abuse

R Hariharanநன்று. இது மெம்பெர் ஒப்பி அசெம்பிளி (மலை) விசாரிக்க வேண்டும்.

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
18-மார்-201915:56:41 IST Report Abuse

RameshSupreme Court Judges / HC Judges / District Court Judges MUST be included as Indian Judiciary tem is the MOST CORRUPTED tem in India as of now due to LACK OF ACCOUNTABILITY...

Rate this:
Manian - Chennai,இந்தியா
21-மார்-201907:23:13 IST Report Abuse

Manianஒரே அடியாக எல்லாமே செய்தால் சடட அஜீரணம் வருமே தம்பி ரமேஷ். பொறுத்துக்கோ. அவர்களும் உள்ளே வருவார்கள். ...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-மார்-201914:10:30 IST Report Abuse

ஆரூர் ரங்எழுபதாண்டுகளாக எந்த ஆட்சியும் செய்யாததை செயல்படுத்தியதை புகழா விட்டாலும் வாயையாவது பொத்திக்கொண்டிருக்கலாம் . கர்நாடகத்தில் லோக் அயுக்த மீதே ஊழலால் புகார்களுக்கு ஆதாரங்களும் வெளியாயின . அதனை அறிந்தவர்கள் இந்த லோக்பால் என்னாகுமென கவலைப்படமாட்டார்கள் .

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-மார்-201917:50:03 IST Report Abuse

தமிழ்வேல் லோக்பால் 70 வருஷ விவகாரமா ? அதை நீங்க 5 வருஷம் இழுக்கடிச்சது அதிகம்தான். ...

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X