அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: அ.தி.மு.க., சார்பில் பார்லி., மற்றும் சட்டசபைக்கான இடை தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டு உள்ளது.
அ.தி.மு.க., சார்பில், 20 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட, விருப்பம் தெரிவித்தவர் களிடம், ஏற்கனவே நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில், 18 சட்டசபை தொகுதிகளுக்கான, இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், நேர்காணல் நடத்தப்பட்டது.

 அ.தி.மு.க., வேட்பாளர், பட்டியல்,வெளியீடு

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர், நேர்காணல் நடத்தினர். நேர்காணலை தொடர்ந்து, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டமும் நடந்தது. பின், மாலையில், ஆட்சிமன்ற குழு கூட்டம் நடந்தது. அதில், வேட்பாளர்கள் தேர்வு குறித்து, நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. இரவில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல்

லோக்சபா தொகுதி - வேட்பாளர்


1. திருவள்ளூர் /தனி - வேணுகோபால்

2. தென் சென்னை - ஜெயவர்தன்

3. காஞ்சிபுரம்/ தனி- மரகதம் குமரவேல்

4. கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி

5. திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

6. ஆரணி - செஞ்சி வே. ஏழுமலை


7. சேலம் - கே.ஆர்.எஸ். சரவணன்

8. நாமக்கல் - பி.காளியப்பன்

9. ஈரோடு - வெங்கு என்ற மணிமாறன்

10. திருப்பூர் - எம்.எஸ்.எம்.ஆனந்தன்

11. நீலகிரி /தனி - எம்.தியாகராஜன்

12. பொள்ளாச்சி - சி.மகேந்திரன்

13. கரூர் - தம்பிதுரை

14. பெரம்பலுார் - என்.ஆர்.சிவபதி

15. சிதம்பரம்/ தனி - பொ.சந்திரசேகர்

16. மயிலாடுதுறை - எஸ்.ஆசைமணி

17. நாகப்பட்டினம்/ தனி - தாழை.ம.சரவணன்

18. மதுரை - வி.வி.ஆர்.ராஜ் சத்யன்

19. தேனி - ரவீந்திரநாத் குமார்

20. திருநெல்வேலி - மனோஜ்பாண்டியன்

சட்டசபை தொகுதி வேட்பாளர்தமிழகத்தில், காலியாக உள்ள, 18 சட்டசபை தொகுதிகளுக்கானஇடைத்தேர்தலும், லோக்சபா தேர்தலுடன் நடக்கிறது. சட்டசபை தொகுதி களுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர்கள் விபரம்:

1. பூந்தமல்லி - தனி - ஜி.வைத்தியநாதன்

2. பெரம்பூர் - ஆர்.எஸ்.ராஜேஷ்

3. திருப்போரூர் - எஸ்.ஆறுமுகம்

Advertisement

4. சோளிங்கர் - ஜி.சம்பத்

5. குடியாத்தம் - தனி - கஸ்பா ஆர்.மூர்த்தி

6. ஆம்பூர் - ஜோதி ராமலிங்க ராஜா

7. ஓசூர் - ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி

8. பாப்பிரெட்டி பட்டி - ஏ.கோவிந்தசாமி

9. அரூர் / தனி - வி.சம்பத்குமார்

10. நிலக்கோட்டை / தனி - எஸ்.தேன்மொழி

11. திருவாரூர் - ஆர்.ஜீவானந்தம்

12. தஞ்சாவூர் - ஆர்.காந்தி

13. மானாமதுரை / தனி - எஸ்.நாகராஜன்

14. ஆண்டிபட்டி - ஏ.லோகிராஜன்

15. பெரியகுளம் /தனி - எம்.முருகன்

16. சாத்துார் - எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்

17. பரமக்குடி / தனி - என்.சதன் பிரபாகர்

18. விளாத்திகுளம் - பி.சின்னப்பன்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k_balaji2k - salaem,இந்தியா
18-மார்-201915:59:47 IST Report Abuse

k_balaji2k39/40 பிஜேபி Win

Rate this:
Suri - Chennai,இந்தியா
18-மார்-201915:11:20 IST Report Abuse

Suriகால கொடுமை. பாராளுமன்றத்தில் பீ ஜெ பீ யை கிழி கிழி என்று கிழித்த தம்பிதுரை, இப்பொழுது பீ ஜெ பீ ஆதரவை கூறுவார். அதே போல பீ ஜெ பீயை கிழித்து நார் நாராக தொங்கவிட்ட அன்வர் ராஜாவிற்கு அல்வா. இதில் இருந்தே தெரிகிறது பீ ஜெ பீ சிறுபான்மையினரை எப்படி திட்டமிட்டு அழிக்கும் என்று.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
18-மார்-201911:06:54 IST Report Abuse

நக்கீரன்எத்தனை பேர் போட்டியிட்டாலும், யார் அதிமுக திமுக சார்பில் போட்டியிட்டாலும் சங்குதான்.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X