அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் குஷ்பு போட்டி?

Added : மார் 18, 2019 | கருத்துகள் (30)
Advertisement
திருச்சியில் குஷ்பு போட்டி?

சென்னை: ''ராகுல் கட்டளையிட்டால், திருச்சி தொகுதியில் போட்டியிடுவேன்,'' என, அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர், குஷ்பு கூறினார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: திருச்சி தொகுதியில் போட்டியிட, என் சார்பில், யாரோ மனு அளித்துள்ளனர். இந்த தகவல், என் கணவர் வாயிலாகத் தான், எனக்கு கிடைத்தது. உண்மையான நிலவரம் தெரியும் வரை, என்னால் எதுவும் கூற முடியாது. இருப்பினும், இறுதி முடிவை, ராகுல் வசம் ஒப்படைக்கிறேன்.

நான் போட்டியிட வேண்டுமா; வேண்டாமா என்பதை, அவர் முடிவு செய்வார். ஒவ்வொரு தொகுதியும், எங்களுக்கு முக்கியம். எனவே, சரியான வேட்பாளர்களை ராகுல் தேர்வு செய்வார். ஒரு வேளை, அவர் என்னை தேர்ந்தெடுத்தால், தேர்தலில் போட்டியிடுவேன். இவ்வாறு குஷ்பு கூறினார்.


காங்கிரஸ் பட்டியல் வரும், 20ல் ரிலீஸ்


தமிழகத்தில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, ஒன்பது தொகுதிகளில் போட்டியிட, 249 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 'கன்னியாகுமரி தொகுதியில், ராகுல் போட்டியிட வேண்டும்' என, சிலர் மனு அளித்தனர். தொகுதிக்கு, ஐந்து பேர் பட்டியலுடன், தமிழக காங்., தலைவர்கள், நேற்று டில்லி சென்றனர். 'சீட்' கேட்கும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், டில்லிக்கு சென்றுள்ளனர். டில்லியில், மத்திய தேர்தல் குழு கூடி, தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளது. வேட்பாளர் பட்டியல், வரும், 20ம் தேதி வெளியிடப்பபட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Athithan Samy - myiladuthurai,இந்தியா
19-மார்-201923:09:17 IST Report Abuse
Athithan Samy pls.gather your deposite
Rate this:
Share this comment
Cancel
s.swaminathan - COIMBATORE,இந்தியா
19-மார்-201918:14:25 IST Report Abuse
s.swaminathan ராகுலை தனியாக சந்தித்தால் சீட் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
s.swaminathan - COIMBATORE,இந்தியா
19-மார்-201918:11:37 IST Report Abuse
s.swaminathan நீ போட்டியிட்டாலும் விளங்கிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X