பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மார் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இதே நாளில் அன்று

மார்ச் 19, 1998 ஏலங்குளம் மனக்கல் சங்கரன்நம்பூதிரிபாட்:

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில், ஏலங்குளம் கிராமத்தில், ௧௯௦௯, ஜூன், ௧௩ல் பிறந்தார். இ.எம்.எஸ்., என, அழைக்கப்பட்ட இவர், 1934ல், காங்கிரசின் ஓர் அங்கமாக, சோஷலிச காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில், முக்கியமானவர். அக்கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலராக, 1934 -- 1940 வரை இருந்தார்.கேரள மாநிலத்தின், முதலாவது முதல்வர் என்ற பெருமைக்குரியவர்; சுதந்திரம் பெற்ற இந்தியாவின், முதல், காங்கிரஸ் அல்லாத முதல்வரும் இவரே. 1967ல், இரண்டாவது முறையாக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட, ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று, முதல்வராக பொறுப்பேற்றார்.கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, 1960 -- 1964 மற்றும் 1970 -- 1977ல், பணியாற்றியவர். எழுத்தாளரான இவர், ஆங்கிலத்திலும், மலையாளத்திலும், பல புத்தகங்கள் எழுதியுள்ளார். 1998, மார்ச் 19ல், காலமானார். அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-மார்-201901:48:55 IST Report Abuse
Bhaskaran இந்தியாவின் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர், நேருவினால் முதன்முதலில் கலைக்கப்பட்ட ஆட்சி இவருடையது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X