அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
புதுசுக்கு தான் மவுசு!
தினகரனால் பாதிப்பு வருவதை
தடுக்க அ.தி.மு.க., தந்திரம்

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின், தி.மு.க., -அ.தி.மு.க.,வுக்கு, புதிய தலைமையை ஏற்றவர்கள், ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

புதுசுக்கு தான் மவுசு! தினகரனால் பாதிப்பு வருவதை தடுக்க அ.தி.மு.க., தந்திரம்


இதனால், 'பழையன கழிதலும், புதியனபுகுதலும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, லோக்சபா தேர்தலில், தங்கள் கட்சி வேட்பாளர்களில், புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.ஜெயலலிதா இருந்தபோது, சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது, வசதி படைத்தவர், முக்கிய நிர்வாகிகளின் வாரிசு என்று பார்க்காமல், புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து, வியப்பில் ஆழ்த்துவார்.
கடைக்கோடி தொண்டரையும், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்களாகஆக்கிய பெருமை, அவருக்கு இருந்தது.தி.மு.க.,வில், கருணாநிதி உறவினர்கள்,முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு, தேர்தலில் போட்டியிட, முக்கியத்துவம் வழங்கப்படும்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 இடங்களில், தனித்து போட்டியிட்டது. அதில், ஜெயலலிதா அறிவித்த, பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், புதியவர்கள். தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன. இறுதியில், 37 இடங்களில், அ.தி.மு.க., வென்று, லோக்சபாவில், மூன்றாவது பெரியகட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.ஜெயலலிதா மறைவால், அ.தி.மு.க.,வுக்கு, துணை முதல்வர்

பன்னீர்செல்வமும், முதல்வர், இ.பி.எஸ்.,சும் தலைமை ஏற்றுள்ளனர். கருணாநிதி மறைவால், தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் உள்ளார்.

இரு கட்சிகளும், புதிய தலைமையின் கீழ், முதல் லோக்சபா தேர்தலை சந்திக்கின்றன. இந்த தேர்தலில் வென்று,தங்களின் ஆளுமையை, கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - புதிய நீதி கட்சி - புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன், மெகா கூட்டணி அமைத்து, அ.தி.மு.க., லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. இதனால், 20 தொகுதி களை கூட்டணிக்கு ஒதுக்கிய நிலையில், எஞ்சிய, 20 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டி யிடுகிறது.

ஆட்சி அதிகாரம், பண பலம், மெகா கூட்டணி போன்ற வலிமையுடன் களமிறங்குவதால், எளிதில் வெற்றி பெறலாம் என, அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.இதனால், தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்டு, அமைச்சர்களின் வாரிசுகள், எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள் என, பலருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது.

இருப்பினும், ஜெயலலிதா பாணியில்,வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக, உளவுத் துறை அறிக்கையை, அ.தி.மு.க., மேலிடம் பெற்றது.அதன் அடிப்படையில், தற்போது, அ.தி.மு.க., போட்டியிடும், 20 தொகுதிகளில், பழைய முகங்கள், ஆறு பேருக்கு மட்டும், மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.எஞ்சிய, 14 பேரும் புதுமுகங்கள். கூட்டணி கட்சிகளுக்கு, 20 இடங்கள் ஒதுக்கியதால், அந்த தொகுதிகளில், 2014ல், அ.தி.மு.க.,வில் வென்ற, 20 எம்.பி.,க்களுக்கும் வாய்ப்புகிடைக்கவில்லை.
அ.தி.மு.க., வேட்பாளர்களில், வாரிசுகள் என பார்த்தால், துணை முதல்வர்

Advertisement

பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்; முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியனின் மகன், மனோஜ் பாண்டியன்; எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவின் மகன், ராஜ்சத்யன்; அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தனுக்கு, சீட் வழங்கப்பட்டுள்ளது.

அதில், ஜெயவர்தன் மட்டும், எம்.பி.,யாக உள்ளார். வாரிசுகள் களமிறங்கியுள்ள தொகுதிகளில், அவர்களுக்கு பதில், வேறு நபர்களை நிறுத்தினால், தினகரனால், அ.தி.மு.க.,விற்கு பாதிப்பு வரும் என, உளவுத் துறை உஷார்படுத்தியது. அதன் பின்னரே, வாரிசுகளுக்கு, சீட் கிடைத்துள்ளது.

தி.மு.க., அறிவித்துள்ள, 20 வேட்பாளர்களில், தயாநிதி மாறன், ஆ.ராஜா, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம் என, முன்னாள் மத்திய அமைச்சர்கள் இருந்தாலும், 13 பேர்புதியவர்கள்.வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின், 'எங்களை பொருத்தவரை, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு, தகுதி, கட்சிக்கு ஆற்றியிருக்கிற பணியை பார்த்து தான், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது; அதிகம் பேர், புதிய முகங்கள்' என, கூறினார்.

இதேபோல், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் அறிவித்த, 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களிலும், பாதிக்கும் மேற்பட்டோர், புதிய நபர்கள் தான்.லோக்சபா மற்றும் சட்ட சபை தொகுதி இடைத்தேர்தல்களில் வென்று, தங்களின் ஆளுமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தான், 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, தங்கள் கட்சி வேட்பாளர்களாக, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், புதிய முகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளன.

Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-மார்-201915:47:53 IST Report Abuse

இந்தியன் kumarமக்கள் போடும் கணக்கு என்பது தேர்தல் முடிவிலே தெரிய வரும்.

Rate this:
RM -  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-201912:25:41 IST Report Abuse

RMOPS

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
19-மார்-201910:30:47 IST Report Abuse

சந்தோசு கோபு//.. ஜெயலலிதா இருந்தபோது, ....... வாரிசு என்று பார்க்காமல், புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து, வியப்பில் ஆழ்த்துவார்...// பழைய முகங்களை மக்கள் முன்னால் அனுப்பினால், செருப்படி நிச்சயம் என்ற நிலை வந்த போது, அதிலிருந்து தப்பிக்க வேற வழியில்லாம A1 அவர்கள் புது முங்களை அனுப்பினாங்க.. திமுக மேல இருந்த கோபத்தால மக்கள் வேறு வழியில்லாம, புது முகங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க..இதையே A1 அவர்கள் தன்னுடைய பாணியா ஆக்கிகிட்டாங்க.. என் பிரயோஜினம், .மன்னார்குடி மாஃபியாவும் அவங்க குடும்பமும் தான் A1 காலங்கள் முழுக்க எல்லாத்தையும் கட்டி ஆண்டது... மக்கள் தலையில 4 லட்சம் கோடி கடன் தானே விழுந்தது...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X