பதிவு செய்த நாள் :
சட்டென்று மாறியது அரசியல் வானிலை!
வட கிழக்கில் தனித்து விடப்பட்ட, பா.ஜ.,

வட கிழக்கு மாநிலங்களில், காங்.,கை காலி செய்யும் நோக்கில், பிராந்திய கட்சிகளை சேர்த்து, 'நேடா' எனப்படும், வட கிழக்கு ஜனநாயக கூட்டணியை, பா.ஜ., அமைத்துள்ளது.

இந்த கூட்டணியில், அசாமை சேர்ந்த, அசாம் கனபரிஷத்தும், பிற வட கிழக்கு மாநிலங்களின் முக்கிய கட்சிகளும் இடம்பெற்றிருந்தன.தற்போதைய லோக்சபா தேர்தலில், நேடா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில், அசாம் கன பரிஷத்தை தவிர, பிற கட்சிகள், பா.ஜ.,வை கைவிட்டு தனியாக போட்டியிடுகின்றன.

வட கிழக்கில்,மாறியது,வானிலை


இதனால், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில், நட்பு கட்சிகளுடன் போட்டியிடும் சூழலுக்கு, பா.ஜ., தள்ளப்பட்டுள்ளது. இவற்றில், அருணாச்சலபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது; அசாம், மணிப்பூரில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மேகாலயா, நாகாலாந்தில், மாநிலக் கட்சிகள் தலைமையிலான அரசில், பா.ஜ., இடம் பெற்று உள்ளது.மிசோரமில், நேடா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பா.ஜ.,வுக்கு ஒரு, எம்.எல்.ஏ., உள்ளபோதும், ஆட்சியில் பங்கு அளிக்கப்படவில்லை.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், இரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு, முதல்வர், கான்ராட் சங்மா தலைமையிலான, என்.பி.பி., எனப்படும், தேசிய மக்கள் கட்சி ஒரு இடத்திலும், யு.டி.பி., எனப்படும், ஐக்கிய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், இந்த இரு தொகுதிகளுக்கும்,

வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில், பா.ஜ., உள்ளது.

மேகாலயா


இங்கு, 2014 லோக்சபா தேர்தலில், காங்., ஒரு இடத்திலும், என்.பி.பி., ஒரு இடத்திலும் வென்றன.என்.பி.பி., தலைவர் கான்ராட் சங்மா, வடகிழக்கில் உள்ள பிற மாநிலங்களில், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

மணிப்பூர்


இங்கு, பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில், என்.பி.எப்., எனப்படும், நாகா மக்கள் முன்னணி, எல்.ஜே.பி., எனப்படும் லோக் ஜன்சக்தி மற்றும் என்.பி.பி., இடம்பெற்றுள்ளன.மணிப்பூரில் உள்ள, இரு தொகுதிகளில் ஒன்றான, வெளி மணிப்பூரில் போட்டியிட, என்.பி.பி., - என்.பி.எப்., விருப்பம் தெரிவித்துள்ளன.இதனால் ஏற்படும் போட்டி, தனக்கு சாதகமாக இருக்கும் என, காங்., கருதுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், மணிப்பூரில், இரு தொகுதிகளையும், காங்., கைப்பற்றியது.

நாகாலாந்து


வட கிழக்கில் உள்ள மற்றொரு மாநிலமான நாகாலாந்தில், என்.டி.பி.பி., எனப்படும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி தலைமையிலான அரசில், பா.ஜ., இடம்பெற்றுள்ளது.இங்குள்ள ஒரு லோக்சபா தொகுதியில், தன் வேட்பாளரை நிறுத்தப் போவதாக, என்.டி.பி.பி., அறிவித்துள்ளது. இங்கு, கடந்த லோக்சபா தேர்தலில், என்.டி.பி.பி., வேட்பாளர் வெற்றி பெற்றார்.

அருணாச்சல பிரதேசம்


அருணாச்சலப்பிரதேசத்தில், லோக்சபா தேர்தலும், சட்டசபைத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட உள்ளன. இங்கு, இரு தொகுதிகளிலும், பா.ஜ., போட்டியிட உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., - காங்., கட்சிகள், தலா, ஒரு இடத்தை வென்றிருந்தன.அருணாச்சலில், இரு லோக்சபா தொகுதிகளிலும்வெற்றி பெறும் நம்பிக்கையுடன், பா.ஜ., பணியாற்றி வருகிறது. ஆனால், என்.பி.பி., ஓட்டுகளை பிரித்தால், அது, தனக்கு சாதகமாக இருக்கும் என, காங்., கருதுகிறது.

Advertisement

திரிபுரா


இங்கு, பா.ஜ.,வுக்கு முக்கிய போட்டியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திகழ்கிறது. கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களிலும், இங்குள்ள இரு தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்ற போதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு கணிசமான வாக்காளர்கள் உள்ளதால், இந்த தேர்தலில், கடும் போட்டி நிலவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மிசோரம்


இங்கு, நிலைமை முற்றி லும் வித்தியாசமானதாக உள்ளது. இங்கு, 2018, நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், எம்.என்.எப்., எனப்படும், மிசோ தேசிய முன்னணி, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது.இந்த கட்சி, நேடா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், பா.ஜ., தனியாக போட்டியிட்டு, ஒரு தொகுதியை வென்றது.மிசோரமில் உள்ள ஒரு லோக்சபா தொகுதியில், எம்.என்.எப்., போட்டியிட உள்ளது.

மறைமுக ஒப்பந்தம்


வட கிழக்கு மாநிலங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில், காங்.,கை அடையாளம் தெரியாத வகையில் துடைத்தெறிவதில், பா.ஜ., வெற்றி பெற்றிருந்தது.தற்போதைய லோக்சபா தேர்தலில், பா.ஜ., உருவாக்கிய, 'நேடா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், பெரும்பாலான தொகுதிகளில் தனியாக போட்டியிடுகின்றன. இருப்பினும், இந்த கட்சிகளுடன் மறைமுக ஒப்பந்தத்துடன், பா.ஜ., செயலாற்றும் எனக் கூறப்படுகிறது.

- சமுத்ர குப்தா காஷ்யப் -சிறப்பு செய்தியாளர்


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-மார்-201911:08:26 IST Report Abuse

Malick Rajaவினை விதத்தால் வினையைத்தானே அறுவடை செய்யவேண்டும்,,, அதிலிருந்து பிஜேபிக்கு விதிவிலக்கு பெறுவது கடினமே.. எப்படி காங்கிரஸ் தூக்கி வீசப்பட்டதோ அதே போல பிஜேபிக்கு நிலைவந்துவிட்டது.. காங்கிரஸ் திரும்ப வரும் ஆனால் பிஜேபிக்கு ஒன்வே தான் ... பிஜேபி இந்த தேர்தலுடன் முடிவுரை எழுதலாம் .. காரணம் ஓட்டுநர் நடத்துணர் இல்லாத வாகனமாக பிஜேபியின் நிலை ஆகிவிட்டது .. நுணலும் தன்வாயால் கெடும் .. மோடியின் வாய்சவடால் .. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றால் அது மண்டைகொழுப்பு மிகுந்த பேச்சாகி போனதன் விளைவு இது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-மார்-201916:43:28 IST Report Abuse

Nallavan Nallavanஅல்லேலூயா ......

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மார்-201908:43:41 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇன்னும் பலவும் இனி வரும்... பி ஜெ பி பாடு ......................

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X