பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய நிலத்தில் மழை நீர் சேமிக்க பண்ணைக்குட்டை அமைக்க தீவிரம்

Added : மார் 18, 2019
Advertisement
 விவசாய நிலத்தில் மழை நீர் சேமிக்க பண்ணைக்குட்டை அமைக்க தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், பெரும்பதி கிராமத்தில், மழை நீர் சேமிப்புக்காக பண்ணைக்குட்டை அமைக்கப்படுகிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, பெரும்பதி கிராமத்தில் விவசாயமும், பால் உற்பத்தியும் முக்கிய தொழிலாக உள்ளது. 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.இவற்றில், 200 கறவை மாடுகள் மூலம் தினமும், ஆயிரம் லிட்டருக்கும் அதிகமாக பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயிகளின் நிலத்தில், குறைந்தது அரை ஏக்கர் பரப்பளவில் பசுந்தீவனப்பயிர்கள் வளர்க்கின்றனர். மானாவாரி விவசாயிகள் புல்வெளிகள் மற்றும் சோளத்தட்டுகளை நம்பியே கறவைகளை வளர்க்கின்றனர்.இந்நிலையை கருத்தில் கொண்டு, பண்ணை குட்டைகள் அமைக்க வேளாண் அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். சிறு, குறு விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைக்க விரும்பினாலும், பயிர் சாகுபடிக்கு நிலம் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் பண்ணை குட்டை அமைக்க தயக்கம் காட்டி வந்தனர்.
இச்சூழலில், பசுமை தென்னை உழவர் மன்றத்தின் தலைவர் திருவேங்கடம், சொந்தமான நிலத்தில் பண்ணைக்குட்டை அமைக்க முன்வந்தார்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய, வேளாண் பொறியியல் துறை சார்பில், பண்ணை குட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, சமீபத்தில் பணிகள் துவங்கின.இக்குட்டை, 50 மீ., நீளம், 30 மீ., அகலத்துடன், ஐந்தடி ஆழமும் கொண்டுள்ளது. மழைக்காலத்தில் சேகரமாகும் நீர், அருகில் உள்ள பாசன கிணறுகளின் நீர் மட்டத்தை பாதுகாக்கும் என்பதால், மேலும் சிலர் பண்ணை குட்டை அமைக்க ஆர்வமாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X