சிட்டிங் எம்.பி., பாச்சா பலிக்கல... | Dinamalar

'சிட்டிங்' எம்.பி., பாச்சா பலிக்கல...

Updated : மார் 19, 2019 | Added : மார் 19, 2019
Share
அனல் காற்றை சுவாசித்து கொண்டே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா. “இப்படியே போச்சுன்னா... மூளையே உருகிடும் போல,'' என்றுபெரு மூச்சு விட்டவாறு சோபாவில் அமர்ந்தாள். சித்ராவின் நிலையை பார்த்த மித்ரா, பெரிய டம்ளரின் ஜில்லென்று மோர் கொடுத்தாள்.ஒரே மடக்கில், குடித்து முடித்த சித்ரா, “தேங்க்ஸ் மித்து,'' என்றவாறே, “தி.மு.க., அணியில, வடே்பாளர் ரெடி; அ.தி.மு.க.,வுல 'மாஜி'
'சிட்டிங்' எம்.பி., பாச்சா பலிக்கல...

அனல் காற்றை சுவாசித்து கொண்டே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா. “இப்படியே போச்சுன்னா...

மூளையே உருகிடும் போல,'' என்றுபெரு மூச்சு விட்டவாறு சோபாவில் அமர்ந்தாள். சித்ராவின் நிலையை பார்த்த மித்ரா, பெரிய டம்ளரின் ஜில்லென்று மோர் கொடுத்தாள்.ஒரே மடக்கில், குடித்து முடித்த சித்ரா, “தேங்க்ஸ் மித்து,'' என்றவாறே, “தி.மு.க., அணியில, வடே்பாளர் ரெடி; அ.தி.மு.க.,வுல 'மாஜி' அமைச்சர் ரெடி ஆகிட்டாராம்” தரே்தல் மடே்டரை ஆரம்பித்தாள்.“ஏக்கா.. எல்லோரும் எல்க் ஷன்பத்தி பேசறாங்கன்னு, நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்க போல,”

“ஆமாண்டி. தோழர் கட்சியில், மாவட்டக்குழு, மாநிலக்குழு, தேசியக்குழு முடிவு செஞ்சதற்கு அப்புறம்தான், வடே்பாளர் யாருன்னு அறிவிப்பாங்க. ஆனா, இப்ப நிலைமை மாறிடுச்சு. தகவல் கசிஞ்சதும், அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே, சுப்பராயனுக்கு 'வாட்ஸ் ஆப்'பில், பிரசாரம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. விவரம் தெரிஞ்சப்பறம்தான், அவசரப்படாதீங்கன்னு, மாவட்ட நிர்வாகிங்க கூப்பிட்டு, சத்தம் போட்டாங்களாம்,”

“சரிக்கா.... ஆளுங்கட்சி கூட்டணியில் எப்படி?”

“அங்கே, 'சிட்டிங்' எம்.பி., விடாப்பிடியா கடே்டு பார்த்தாங்க. எந்த பதவியும் இல்லாம இருக்கறதால, மா.செ., சீட் வாங்கிட்டாராம்,” என்று சித்ரா சொன்னதும், மித்ராவின் மொபைல் போனில், நோட்டிபிகேஷனில், தரே்தல் கமிஷனின் விளம்பரம் வந்தது.

அதைப்பார்த்து கொண்டே மித்ரா, “அக்கா, எலக் ஷன் டென்ஷன் ஒரு பக்கம் இருந்தாலும், தாராபுரத்தில், 'மாமூல்' வேலை கொஞ்சம்கூட பாதிக்கலையாம். இத்தனைக்கும் எலக் ஷன் வந்ததால், ஒட்டுமொத்தமா டிரான்ஸ்பர் செஞ்சாலும் கூட, சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நடக்குதாம். என்னன்னு விசாரிச்சா, கொடுக்க வேண்டியவங்களுக்கு கரெக்டா 'ப' சப்ளையாவதால், எந்தப்பிரச்னையும் இல்லையாம். அதுவும், எலக் ஷன் நெருங்க... நெருங்க, இன்னும் அதிகமாகி, பெரிய்ய்ய.... நோட்டு வேணுமின்னு உத்தரவாம்.''''அடக்கடவுளே... கரை வேட்டிகளோடு ஒப்பிட்டா, காக்கி சட்டைக்காரங்கதான், வெயிலை விட வெளுத்துகட்டுறாங்கன்னு தெரியுது,

இது பரவாயில்ல.... போன எலக் ஷனில், ஈரோடு தொகுதியில், அதிகாரிங்க, பல தில்லுமுல்லு பண்ணாங்களாம். அதை பாலோ பண்ணி, திருப்பூரிலும் செயல்படுத்த ஒரு குரூப் முயற்சி எடுக்குதாம். இப்பவே, அதுக்காக, டூப்ளிகெட் பில் எல்லாம் தயாராக இருக்குதாம்,'' என்றாள் சித்ரா.

ஏக்கா... ''கண்காணிப்பு குழு எதுக்கு இருக்குது.''

''அட... நான் சொன்னதே அவங்களை பத்திதான்,'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.

“இந்த பொள்ளாச்சி விவகாரத்தை, வேணுமின்னே ஒரு சிலர் பெரிசுபண்ணி, ஆதாயம் தடேுறாங்க,'' பார்த்தீங்களா?''உண்மைதான். சிக்கண்ணா காலேஜில், மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செஞ்சாங்க ளாம். ஆனால், வழக்கம்போல் மாணவர் அமைப்பு என்ற பெயரில் அங்கு சென்ற சிலர், மறியல் செய்யலாம் வாங்கன்னு கூப்பிட்டிருக்காங்க. ஆனா, சுதாரிச்சிட்ட, மாணவர்கள், காலேஜ் கேம்பஸிலேய நடத்திக்கிறோம். நீங்கள் தலையிட வேண்டாம் எனக்கூறி நோஸ்கட் விட்டாங்களாம்,'' என்ற சித்ரா, டேபிள் மலே் இருந்த பேப்பரில், மதுரை அருகில், இரிடியம் விற்பதாக கூறி, பல லட்சம் சுருட்டியவர் கைது, என்ற செய்தியை வாசித்தாள்.

அதைக்கடே்ட மித்ரா, ''அக்கா... இதே மாதிரி, தாராபுரத்திலும், ஒரு கும்பல், இரிடியம் தரனே்னு சொல்லி, 18 லட்சம் ரூபாய் சுருட்டிட்டு போயிருச்சு. ஏமாந்த அந்நபர், பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டாங்கன்னு, போலீசில் புகார் கொடுத்துருக்காரு.''

''புகாரு, பொய்யுனு போலீசுக்கு தெரிஞ்சிருச்சு. ஏமாத்தன ஆசாமியை கண்டுபிடிச்சு, ஒரு லாட்ஜில் வச்சு, டிஸ்கஸன் செஞ்சு, ஒரு பெரிய தொகையை, கறந்துட்டாங்களாம். முக்கியமாக, முருகன் கையில இருக்கற ஆயுதத்தை பரோக கொண்ட அந்த அதிகாரிதான், இதுக்கு டீம் லீடராம்.''எந்த கேஸாக இருந்தாலும், மணி... மணியாக டீல் பண்ணி, வைட்டமின் 'ப' மழையில் நனையுறாராம். இந்த விஷயம் பெரிய அதிகாரிக்கு தெரிஞ்சும் கூட, ஒண்ணுமே நடக்கலையாம்.''

''அப்ப அவங்களுக்கு கப்பம் கட்டிட்டாங்கன்னு சொல்லுடி,'' கோபமாக சொன்ன, சித்ரா அங்க அவங்க அப்படி... இங்க இவங்க இப்படி என்றாள்.அதைக்கடே்டு குழம்பிய மித்ரா, என்னக்கா சொல்றீங்க?“கார்ப்ரேஷனில், பட்ஜெட் கூட்டம், நாலு சுவத்துக்குள்ள யாருக்கும் தெரியாம நடத்தி முடிச்சிட்டாங்க. இதை களே்விப்பட்ட பலரும், மக்கள் வரிப்பணத்தில் செய்ற, திட்டத்தை பத்திக் கூட சொல்லாம மறச்சுட்டாங்கனு செம கோபத்துல இருக்காங்க.அதிகாரி செய்யணும்னு நினைச்சா கூட, ரொம்ப வருஷமாக குப்பை கொட்டுற முடிசூடா மன்னர்கள் சிலரோட, வேலைதான், இதுக்கு காரணமாம், சித்ரா கொட்டினாள்.

“அக்கா.. இங்க, பெட்ரோல் பங்க் பக்கத்துல, சரக்கு கடை பாரில், ஒரு நம்பர் லாட்டரிக்கு உள் வாடகைக்கு விட்டிருக்காரு. தினமும், லட்சக்கணக்கில் பணம் புரளுதாம்.இந்த விஷயம் தெரிஞ்சு யாராவது போனால், ஆளுக்கு தகுந்த மாதிரி, பணத்தை, வாயில் வச்சு அடைச்சிடறாங்களாம்.“இவங்க எல்லாம், எப்ப திருந்துவாங்கன்னு தெரியல, என்ற சித்ரா, ஓ.கே., மித்து சரி புறப்படு, கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டத்துக்கு போலாம் என்றதும், மித்ரா எழுந்தாள்.“மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும். உள்ளம் என்று ஊரு இருக்கும், அந்த ஊருக்கு ஒரு பெயர் இருக்கும். அது கடமை,கடமை,” என்று பாடிய படிசித்ரா வந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X