பிரியங்காவை, 'பப்பி' என்பதா? மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு

Updated : மார் 19, 2019 | Added : மார் 19, 2019 | கருத்துகள் (71)
Advertisement

புதுடில்லி: காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா குறித்து, அவதுாறாக பேசியதாக, மத்திய அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, மகேஷ் சர்மாவுக்கு, காங்., கட்சியினர், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.



மத்திய சுற்றுலா துறை அமைச்சராக பதவி வகிப்பவர், பா.ஜ.,வைச் சேர்ந்த மகேஷ் சர்மா. இவர், சமீபத்தில், பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பேசியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அதில் அவர், காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும் காங்., பொதுச் செயலராக, சமீபத்தில் நியமிக்கப்பட்டவருமான, பிரியங்காவை, கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
அவர் பேசி உள்ளதாவது: பிரதமர் பதவியை பிடிப்பதற்கு, எதிர்க்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. முதலில், பப்பு வந்தார்; பின், மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் வந்தனர். இப்போது, 'பப்புவின் பப்பி' வந்துள்ளார். இவ்வாறு, அவர் அதில் பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுலை, பா.ஜ., வினர், 'பப்பு' என, விமர்சித்து வருகின்றனர். பப்பு என்ற ஹிந்தி வார்த்தைக்கு, சிறுவன், குழந்தை, குட்டி என அர்த்தம். இதேபோல், பப்பி என்ற வார்த்தையை பயன்படுத்தி, பிரியங்காவையும், அவர் விமர்சித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.




'பொறுப்பான அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர், இதுபோல், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது, கண்டனத்துக்குரியது' என, காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பிரியங்காவை மட்டு மல்லாமல், 'மம்தா பானர்ஜி, கதகளி ஆடினாலும் சரி, குமாரசாமி, பாட்டு பாடினாலும் சரி; அதை யாரும் பார்க்கவும் மாட்டார்கள்; கேட்கவும் மாட்டார்கள்' என்றும், மகேஷ் சர்மா விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமநாதன் நாகப்பன் கேரக்டர் அசாசினேஷன் செய்வது பாஜக மற்றும் அவர்கள் ஆதரவு பத்திரிக்கையின் கைவந்த கலை. இதை வைத்துத்தான் அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள். நியாயமான நேர்மையான அரசியலை வாஜ்பாயி காலங்களில் பார்க்க முடிந்தது. மோடியின் காலத்தில். நாட்டில் அசிங்கங்கமான சொல்லாடல்கள், எதிர் கட்சியினரை தரக்குறைவாக நடத்துவது என்று பல பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். ஹிந்துத்துவா இதைத்தான் சொல்லிக் கொடுத்ததா தெரியவில்லை. வாஜ்பாய் காலத்தில் ஹிந்துத்துவாவின் மேல் இருந்த மரியாதை மோடியின் காலத்தில் உண்மை நிலைமையை காற்றில் கரைத்து விட்டது. மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டும்தான் ஹிந்துயிசம். தான் ஒரு ஹிந்து என்று ஒருவர் பெருமையாக நினைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அன்பை செலுத்துவதன் மூலம் மற்றவர்களை பண்பாக நடத்துவதன் மூலம் மட்டுமே அதை பறைசாற்ற முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
19-மார்-201922:49:52 IST Report Abuse
Rohin இல்லின்னா இப்படி கூப்பிடலாம் எப்பிடின்னா "ரோசா கே பேதி"
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
19-மார்-201922:41:53 IST Report Abuse
Rohin இனிமே யாராவது பப்பி என்று சொன்னால் வதேராவிடம் சொல்லிப்புடுவேன், ஏன் என்றல் கடந்த எழுபது வருட வரலாறு (ரோசா பூக்காரு நல்லா செஞ்சது) இவருக்கு மட்டும் தெரியும் என்று பப்பி நெனக்கிது, பப்பி நீ சூப்பர் அறிவாளி பப்புவை விட..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X