கூட்டணிக்கு ஆள் தேடும் தீபா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணிக்கு ஆள் தேடும் தீபா

Added : மார் 19, 2019 | கருத்துகள் (8)
 கூட்டணிக்கு ஆள் தேடும் தீபா

'நானும் ரவுடி தான்... நானும் ரவுடி தான்...' என, நடிகர் வடிவேலு பாணியில், எம்.ஜி.ஆர்., - அம்மா தீபா பேரவை பொதுச்செயலரான தீபா, 'நானும் அரசியல்வாதி தான்...' என, தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், போட்டியிட முடியாத வகையில், சிலர் சதி செய்தது போல, இந்த தேர்தலிலும் சதி செய்து விடக்கூடாது என்பதில், ரொம்பவே உஷாராக இருக்கிறார். லோக்சபா தேர்தலிலும், இடைத்தேர்தலிலும், இம்முறை தீபா பேரவை, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. ஆனால் அதற்கு, 'பசையான' ஆட்கள் கிடைப்பதில் தான் சிக்கல் நீடிக்கிறது. இருந்தாலும், மனம் தளராத தீபா, தேர்தல் வேலையில், 'பிசி'யாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்.

அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக அறிக்கை மூலம், 'மெகா' கூட்டணியை அமைக்க பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், 'எங்களுடன் இணைந்து, கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஆர்வமுள்ள, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஆர்வமுள்ள கட்சிகள், துணை பொதுச்செயலரான மாதவனை, நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

இதை கேள்விபட்டு, 'இருக்கிற தேர்தல் வேலைல இந்தம்மா வேற காமெடி பண்ணிக்கிட்டு...' என, அ.தி.மு.க.,வினர் அங்கலாய்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X