அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிதாக உருவாகிறதா 'லக.. லக..' கூட்டணி

Added : மார் 19, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 புதிதாக உருவாகிறதா 'லக.. லக..' கூட்டணி

'தமிழக அரசியலில், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தீபாவுடன், டி.ராஜேந்தர் கூட்டணி வைக்க உள்ளார்' என, அவரின் இளைய மகன் பெயரிலான, முகநுாலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 'அப்பதிவு போலி' என, சிம்பு தரப்பில் மறுக்கப்பட்டது.'நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும்' என, இயக்குனர் சுசீந்திரன், 'டுவிட்டர்' பக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்த, 'மீம்ஸ்' மற்றும் கருத்து மோதல்கள், வலைதளங்களில் வரிசைகட்டின.

இந்நிலையில், சமீபத்தில் மதம் மாறிய, டி.ராஜேந்தரின் இளைய மகன் பெயரிலான, முகநுால் பக்கத்தில், நேற்று முன்தினம், 'எங்க அப்பா தான் அடுத்த முதல்வர்' என, கூறப்பட்டிருந்தது. இதை பலர், 'கமென்ட்' அடித்து பகிர, 'உண்மை சில நேரம், காமெடியாக தான் தோன்றும்... தீபா பேரவையோடு சேர்ந்து, லட்சிய, தி.மு.க., 40 தொகுதிகளையும் கைப்பற்றும்' என, பதிலளித்திருந்தார்.

ஆனால், 'லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என அறிவித்த, டி.ராஜேந்தர், 'கட்சி தொண்டர்கள் விரும்பியதால், விருப்ப மனு பெற்றேன். என் முடிவை, விரைவில்அறிவிப்பேன்' என, ஏற்கனவே கூறியுள்ளார்.இந்நிலையில், நடிகர் சிம்பு, 'அப்பதிவிற்கும், குறளரசனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-மார்-201917:07:07 IST Report Abuse
Chowkidar NandaIndia இதுக்குதான் அந்த பையனை மதம் மாறவேண்டாம்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன். கேட்டாத்தானே. இப்ப, ஊர் உலகமே சிரிக்கும்படியில்ல நாறிப்போச்சு நிலைமை.
Rate this:
Share this comment
THALA - salem,இந்தியா
23-மார்-201911:07:30 IST Report Abuse
THALA அவன் மதம் மாறுனதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்...
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-மார்-201916:51:45 IST Report Abuse
Yaro Oruvan ஐ.. தாடியார் மொதல்வரு / தீபா தொண மொதல்வரு / மாதவன் நிதி அமிச்சரு / தீபா வண்டி டைவரு கல்வி அமிச்சரு... நெனச்ச பாத்தாலே சும்மா அதுறுது.. அதுலயும் சின்னவன் பேஸ்புக்ல போட்ருக்குற 40 / 40 கமெண்ட்டு அல்டிமேட்.. மதம் மாறின ஒடனே புத்திசாலி ஆயிட்டாப்புல புள்ளாண்டான்..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201910:36:21 IST Report Abuse
Malick Raja T.Rajendar.. என்ற பெயருடன் மறுபடியும் நீடூழி வாழ வாழ்த்தலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X