அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Updated : மார் 19, 2019 | Added : மார் 19, 2019 | கருத்துகள் (192)
Advertisement

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், காஸ் நேரடி மானியம் ரத்து செய்யப்பட்டு பழைய முறைக்கு மாற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.




சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.


தேர்தல் அறிக்கை விவரம்


* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்படும் வகையில், இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தம்
* விவசாய துறைக்கு தனி பட்ஜெட் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.
* மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

* வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி பெற பாரபட்சமில்லாமல் நிதி பங்கீடு
* மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.





* தனி நபர் வருமானத்தை ரூ.1.50 லட்சமாக உயர்த்திட நடவடிக்கை
* நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்டவை பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும்.
* காஸ் சிலிண்டருக்கான மானிய தொகை, வங்கியில் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, முன்பிருந்தது போல் மாற்றப்படும்.
* தென் இந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை.
* மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.
*நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
* குறைந்த பட்ச வேலை உறுதியளிப்பு திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
* மாணவர்களின் கல்விக்கடன்முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை.
* தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10வது வரை படித்துள்ள 1 கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.
* தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* கிராமப்புறங்களில் 10வது வரை படித்த 50 லட்சம் பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
* கிராம பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு தொழில் துவங்க 50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்
* அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அமைக்கப்படும்.
* நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் ரத்து
* பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் சலுகை
* மதுரை, திருச்சி சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்
* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும்
* சமூக வலைதளங்களில் ஆபாச செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
* மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்
* சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
* மத்திய மாநில அரசுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்
* பாலியல் குற்றங்களை தடுக்க புதிய சட்டம்
* கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்
* பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்
* சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* கார்ப்பரேட் நிறுவனங்களில் 10 ஆயிரம் சம்பளத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
* உடல் உறுப்புகள், பாலியல் தொழிலுக்காக ஆட்கள் கடத்துவதை தடுக்க கடுமையான நடவடிக்கை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.





நன்றி


முன்னதாக அவர் பேசுகையில், அதிமுக அரசால் ஏற்பட்ட ஊழலை கண்டுகொள்ளாமல், மத்திய அரசு பாதுகாப்பதால், தமிழக பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது, இதற்கு உதாரணமாக உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரித்த டி.ஆர்.பாலு சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி, திருச்சி சிவா, ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ராமசாமி குழுவிற்கும், அவர்களுக்கு உதவிய வேலுமணி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (192)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
25-மார்-201919:17:12 IST Report Abuse
Ramesh M 1 .suntv கேபிள் சார்ஜ் குறையுங்கள்.அவர்களுக்கு ஒரு தொகுதி கொடுத்திருக்கிறீர்கள். 2 . நதிநீர் இணைப்பு, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை இந்த தேர்தல் அறிக்கையில் சேர்த்தமைக்கு நன்றி. இதற்க்கு திரு ரஜினிகாந்த் அவர்களுக்கும் நன்றி உரித்ததாகும். இவ்விரண்டும் அவர் நீண்டகாலமாக கூறிவந்தது.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
25-மார்-201908:33:16 IST Report Abuse
karutthu காஸ் மான்யம் போன்றவற்றை முடிவு செய்வது மத்திய அரசு .ஸ்டாலின் எப்படி வாக்கு கொடுக்கிறார் என்று புரியவில்லை இதற்கு முன் எம் ஜி ஆர் அவர்கள் தபால் தலை (ஸ்டாம்ப் ) விலையை குறைப்பேன் என்று சொன்னபொழுது கைதட்டி சிரித்தவர்கள் தான் இப்போது இப்படி கூறுகிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
23-மார்-201918:30:42 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam மோடி வரிவிலக்கு சென்ற ண்டு 2.5 வரை 0 இப்ப 5 லட்ச்ம் வரை 0 . ஆனல் காங்கிரஸ் 10 ஆண்டுல 2004 ல 1 லட்சமா இருந்த்தத 2014 எல்க்ஷனுக்கு 2.5 லட்சமா கொண்டு வந்தங்க ஆனாஅ மோடி 4 வருஷட்துல ஜி எச் டி மூலம் வருமானம் வர வழி செய்து விட்டு 5 லட்சமாக அறிவிச்சாரு இனி காங்கிரச் வந்து வருமானம் இல்லை மீண்டும் 1 லட்சம் ஸ்மபளம் வாங்குபவர்களும் வரி கட்டினால் தான் நாட்டை வளர்சி பாதைக்கு எடுத்துச்செல்ல முடியும் நாங்க ஒண்ணும் வரி கூட்ட மாட்டோம்னு அறிக்கையில் சொல்லலை என் கூறுவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X