காஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Updated : மார் 19, 2019 | Added : மார் 19, 2019 | கருத்துகள் (192)
Share
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், காஸ் நேரடி மானியம் ரத்து செய்யப்பட்டு பழைய முறைக்கு மாற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். தேர்தல் அறிக்கை

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், காஸ் நேரடி மானியம் ரத்து செய்யப்பட்டு பழைய முறைக்கு மாற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.latest tamil newsசென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.


தேர்தல் அறிக்கை விவரம்


* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்படும் வகையில், இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தம்
* விவசாய துறைக்கு தனி பட்ஜெட் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.
* மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

* வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி பெற பாரபட்சமில்லாமல் நிதி பங்கீடு
* மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.


latest tamil news* தனி நபர் வருமானத்தை ரூ.1.50 லட்சமாக உயர்த்திட நடவடிக்கை
* நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்டவை பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும்.
* காஸ் சிலிண்டருக்கான மானிய தொகை, வங்கியில் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, முன்பிருந்தது போல் மாற்றப்படும்.
* தென் இந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை.
* மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.
*நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
* குறைந்த பட்ச வேலை உறுதியளிப்பு திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
* மாணவர்களின் கல்விக்கடன்முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை.
* தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10வது வரை படித்துள்ள 1 கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.
* தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* கிராமப்புறங்களில் 10வது வரை படித்த 50 லட்சம் பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
* கிராம பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு தொழில் துவங்க 50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்
* அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அமைக்கப்படும்.
* நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் ரத்து
* பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் சலுகை
* மதுரை, திருச்சி சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்
* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும்
* சமூக வலைதளங்களில் ஆபாச செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
* மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்
* சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
* மத்திய மாநில அரசுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்
* பாலியல் குற்றங்களை தடுக்க புதிய சட்டம்
* கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்
* பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்
* சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* கார்ப்பரேட் நிறுவனங்களில் 10 ஆயிரம் சம்பளத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
* உடல் உறுப்புகள், பாலியல் தொழிலுக்காக ஆட்கள் கடத்துவதை தடுக்க கடுமையான நடவடிக்கை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


latest tamil news
நன்றி


முன்னதாக அவர் பேசுகையில், அதிமுக அரசால் ஏற்பட்ட ஊழலை கண்டுகொள்ளாமல், மத்திய அரசு பாதுகாப்பதால், தமிழக பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது, இதற்கு உதாரணமாக உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரித்த டி.ஆர்.பாலு சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி, திருச்சி சிவா, ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ராமசாமி குழுவிற்கும், அவர்களுக்கு உதவிய வேலுமணி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X