அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொந்தளிக்கும் நிர்வாகிகள்

Added : மார் 19, 2019 | கருத்துகள் (14)
Advertisement
கொந்தளிக்கும், நிர்வாகிகள், காங்கிரஸ்

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்து காங்கிரஸ் அகற்றப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இல்லை. அடிதடி, வேட்டி கிழிப்பு போன்ற அதிரடி காட்சிகள், அடிக்கடி நிகழ்வது தொடர்கிறது. இருப்பினும், சென்னையின் மத்திய பகுதியில் உள்ள, காங்., அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு இன்னமும் எதிர்பார்ப்போடு நிர்வாகிகள், தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதுவே, அக்கட்சியின் பலம்.
சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என, எப்போது தேர்தல் அறிவிப்பு வந்தாலும், நமக்கு எப்படியும்,'சீட்' கிடைக்கும் என, கட்சி நிர்வாகிகள், நம்பிக்கையுடன் சத்தியமூர்த்தி பவனை வலம் வருவது வாடிக்கை. அந்த வகையில், சமீப காலமாக, சத்தியமூர்த்தி பவனுக்கு வரும் கட்சி நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.




கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், பொதுச் செயலாளர் வேணுகோபால் போன்றோர், அடிக்கடி தமிழகம் வந்து, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று,' ராகுல் தான் அடுத்த பிரதமர் ' என, தொடர்ந்து பேச, தொண்டர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. கூடவே, காங்கிரசில் புதிதாக உருவாக்கப்பட்ட,' சக்தி செயலி' மூலம், உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரம் காட்டப்பட்டது. தமிழக தலைவர்களுக்கும், உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விஷயத்தில், கட்சி நிர்வாகிகள் காட்டும் ஆர்வம், தலைவர்களிடம் இல்லை. வழக்கம்போல, கட்சித் தலைமைக்கு போக்குக் காட்டிய தலைவர்கள், சிலரை மட்டுமே உறுப்பினராக சேர்த்தனர்.கட்சியில்,'சீட்' பெற இது உதவும் என நினைத்து, அதிக எண்ணிக்கையில் உறுப்பினர் சேர்க்கை நடத்திய நிர்வாகிகளுக்கு வழக்கம் போல, 'அல்வா' கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், 'சீட்' கனவில் இருந்த, பல மாவட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ஒன்பது இடங்களை பெற்றுள்ள தமிழக காங்., சார்பில், தொகுதி பங்கீட்டுப் பேச்சு வார்த்தைக்குச் சென்ற தலைவர்கள், கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, சிவகங்கை, திருச்சி, கரூர், ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளைப் பெற்றனர்.

வின்சென்ட், மாணிக் தாகூர், ஆரூண், கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், செல்வ பெருந்தகை அல்லது ஜெயக்குமார், செல்லக்குமார் ஆகிய தலைவர்களுக்காகவே இந்த தொகுதிகள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள்; ஆனாலும், தலைவர்கள்.இப்படி தலைவர்களுக்காக மட்டும், தொகுதிகளை கேட்டு வாங்கி இருப்பது, தங்களை ஏமாற்றும் செயல் என, கட்சி நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

இது தான், இறுதிப் பட்டியல் என்ற முடிவுக்கு வந்து விட்ட அவர்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சென்னை, சத்தியமூர்த்தி பவனை நோக்கி வரத் தயாராகி விட்டனர். சத்திய மூர்த்தி பவனில் அவர்கள் ஒன்று கூடினால், கற்கள் பறக்கும், வேட்டிகள் கிழியும்.இருந்தாலும் என்ன... தலைவர்கள் வழக்கம் போல, சொகுசு காரில்,' தப்பி' சென்று விடுவர். இதே நிலை நீடித்தால், இன்னும், 100 ஆண்டுகள் கடந்தாலும், தமிழகத்தில், காங்., ஆட்சி வராது என, கட்சியின் விசுவாச நிர்வாகிகள் சாபமிடுகின்றனர்.இதெல்லாம், சத்தியமூர்த்தி பவன் கதவு வரை மட்டுமே கேட்கும்... வேறு யார் கேட்பார்கள்...?

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vvkiyer - Bangalore,இந்தியா
20-மார்-201917:01:46 IST Report Abuse
vvkiyer பதவிக்காக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் எதுவும் செய்வார்கள் .தமிழ்நாடு காங்கிரஸ்(ஓ) தலைவர் ராமசந்திரன் சத்யமூர்த்தி பவனை இந்திரா காங்கிரசுக்கு தாரை வார்த்ததற்கு பரிசாக கேரளா ஆளுநராக நியமிக்கப்பட்டார். .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மார்-201908:03:35 IST Report Abuse
Srinivasan Kannaiya பதவிக்காக மட்டும் வருபவர்களை வைத்து கட்சியை வளர்க்க முடியாது...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மார்-201908:03:01 IST Report Abuse
Srinivasan Kannaiya கட்சி வளர நடத்த காங்கிரஸ் மேலிடம் சரியான தலைமையை போட்டு அவருடைய செயல்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X