பதிவு செய்த நாள் :
மக்களுடன் உரையாடல் பிரதமர் மோடி திட்டம்

புதுடில்லி:லோக்சபா தேர்தலுக்கான, 'நானும் தேசத்தின் காவலாளி' பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிரதமர்மோடி, மக்களிடம் கலந்து ரையாட திட்டமிட்டுள்ளதாக, பா.ஜ., அறிவித்துள்ளது.

 மக்களுடன், உரையாடல், பிரதமர் மோடி, திட்டம்

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களின் ஆதரவை

திரட்டுவதற்காக, அரசியல் கட்சியினர், தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் மோடி, 'நானும் காவலாளி' என்ற பிரசாரத்தை ஏற்கனவேதுவங்கியுள்ளார்.'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட, சமூகவலைதளங்களிலும், பா.ஜ., வினர், இந்த பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையில், 'நானும் காவலாளி' என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி, வரும் ௩௧ல், 'வீடியோ கான்பரன்ஸ்'மூலமாக மக்களிடம் கலந்துரையாடி,அவர்களது ஆதரவை திரட்ட முடிவு செய்துள்ளார்.


நாடு முழுவதும் பல்வேறு பகுதி களில், 500 இடங் களில், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement

இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலை வரும், மத்திய சட்ட அமைச்சருமான, ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,''நானும் காவலாளி பிரசாரம், மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. இதற்கு, மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-மார்-201922:51:03 IST Report Abuse

Mani . V"நாலே முக்கால் வருடம் தண்டமாக பொழுதை கழித்து விட்டேன். அடுத்து மீண்டும் பதவிக்கு வருவதற்காக மக்களுடன் உரையாடல் நடத்த இருக்கிறேன். அப்புறம் ஐ வில் மீட் கார்ப்பரேட் ஓனர்ஸ் அண்ட் சினி ஆக்ட்டரஸ் (நடிகைகள்) ஒன்லி. நோ பப்ளிக் மீட்டிங். ஓக்கே".

Rate this:
sams - Palakkad,இந்தியா
20-மார்-201921:32:59 IST Report Abuse

samsMakkalukku theriuma?

Rate this:
20-மார்-201921:12:06 IST Report Abuse

ஆப்புஉங்களோட மோடி ஐயா பேசுனாருன்னா தவறாம அந்த 15 லட்சம் பத்தியும், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு பத்தியும் கேளுங்க மக்களே...

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X