பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'பயங்கரவாதத்தை வேரறுக்க
மத்திய அரசால் முடியும்

குர்கான்:''பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் திறமையும், தகுதியும், மத்திய அரசுக்கு உள்ளது,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் கூறினார்.
ஹரியானாவில், முதல்வர், மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குர்கானில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 80ம் ஆண்டு விழா,

நேற்று நடந்தது. விழாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம்,புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை, இந்தியா மறக்க வில்லை; மறக்கவும் மறக்காது.பயங்கரவாதத்தை வேரறுக்கவும், அதை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மத்திய அரசுக்கு, திறமையும், தகுதியும் உள்ளது.நாம் என்ன செய்ய

Advertisement

Imageவேண்டும்; நம் வழி என்ன; நாம் எப்படி, எப்போது பதிலடி தர வேணடும் என்பதை, திட்டமிட்டு செய்ய முடியும். அதற்கான தைரிய மும், திறமையும் நாட்டின் தலைமையிடம் உள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புக்கு பிரச்னைகள் ஏற்பட்ட போது, பல நாடுகளில் அரசுகள் கவிழ்ந்து உள்ளன; அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் ஒரு போதும், அப்படி நடந்தது இல்லை. அமைதி, சட்டம் -ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பதில், ரிசர்வ் போலீஸ் படையின் பங்கு, முக்கியத்துவம் வாய்ந்தது.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-201921:15:50 IST Report Abuse

ஆப்புஇவரோட ஜோக்குக்கு அளவே இல்லாம போச்சு..ஆனானப் பட்ட அமெரிக்கா, இங்கிலாந்து ,ஃ ப்ரான்சு எல்லாமே மூர்க்க பயங்கரவாதத்தை ஒண்ணும் பண்ண முடியலே...இவுரு எப்பிடி வேறறுக்கப் போறாராம்? அன்பாலயா? சரியாப் போச்சு.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201917:52:14 IST Report Abuse

Malick Rajaசினிமா காமெடிங்களையெல்லாம் விட அசிங்கமாக இல்லையா . 45.CRPF.வீரர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு இதுவரை ஒரு முடியின் நுனியளவு கூட நடவடிக்கை இல்லை . இந்த பரதேசிகள் இப்படியே பேசியே அழிந்துபோகும்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20-மார்-201917:06:21 IST Report Abuse

Endrum Indianமுடியும் ஆனால் இது வரை ஒரு சரியான நடவடிக்கையையும் இந்த மத்திய அரசும் எடுக்கவில்லை. புல்வாம் தாக்குதல், கைது, விசாரணை??மரண தண்டனை நிறைவேற்றம், செய்ததா பி.ஜெ.பி. இன்னும் விசாரணை என்ற பெயரில்???இந்த மாதிரி முட்டாள்தனத்தை நிறுத்தினால் தான் விடிவு காலம் வரும். தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் அவர்கள் ரத்த சம்பந்த உறவினர்களையும் கைது செய்து மரண தண்டனை கொடுத்தால் ஒரு 10 ,000 பேர் சாவார்களா??பரவாயில்லை??இந்தியாவில் அப்படியும் 132 .4 கோடி தானிருக்கும் , இதை செய்யாத வரை நாடு இதே மோசமான நிலையில் தானிருக்கும்.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X