'வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து'

Added : மார் 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 'வட கிழக்கு  மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து'

இடாநகர், ''மத்தியில், காங்., ஆட்சி அமைந்தால், வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம்,'' என, காங்., தலைவர் ராகுல் கூறினார்.வடகிழக்கு மாநிலமான, அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.இந்நிலையில், இடாநகரில் நேற்று நடந்த, காங்., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ராகுல் பேசியதாவது:மத்தியில், காங்., ஆட்சி இருந்த போது, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. காங்., ஆட்சிக்கு வந்தால், வட கிழக்கு மாநிலங்களுக்கு, மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறார்.'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என்கிறார்; ஆனால், 'பா.ஜ., இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என, நாங்கள் கூறுவதில்லை; அப்படி கூறவும் மாட்டோம்.வேலையில்லாத இளைஞர்கள் சுயதொழில் துவங்க, கடனுதவி அளிக்காமல், தொழிலதிபர்களின், 3.5 லட்ச கோடி ரூபாய் கடனை, பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மார்-201922:03:35 IST Report Abuse
natarajan pappu will give special status to pakisthan also if elected...which will never happen.
Rate this:
Share this comment
Karthik - Chennai,இந்தியா
20-மார்-201904:37:11 IST Report Abuse
KarthikYour comment shows who you are....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X