பொது செய்தி

இந்தியா

அனில் அம்பானியை காப்பாற்றிய சகோதரர் முகேஷ் அம்பானி

Added : மார் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 அனில் அம்பானியை காப்பாற்றிய சகோதரர் முகேஷ் அம்பானி

மும்பை, எரிக்சன் நிறுவனம் தொடர்பான வழக்கில், அனில் அம்பானி செலுத்த வேண்டிய, 453 கோடி ரூபாயை, அவரது சகோதரர் முகேஷ் அம்பானி செலுத்தியுள்ள தகவல், தற்போது வெளியாகி உள்ளது. இதன் மூலம், அனில் அம்பானி, சிறைக்கு, செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது.தொழில் அதிபர் அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' நிறுவனம், தொலை தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்த வகையில், ஸ்வீடன் நாட்சை் சேர்ந்த, எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் நிலுவை வைத்திருந்தது.இந்தத் தொகையை, உறுதி அளித்தபடி, அனில் அம்பானி தராததால், எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஏற்கனவே நீதிமன்றத்தில் செலுத்திய, 118 கோடி ரூபாய் தவிர்த்து, நான்கு வாரங்களில், எரிக்சன் நிறுவனத்துக்கு, 453 கோடி ரூபாய் வழங்கத் தவறினால், மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்' என, உத்தரவிட்டது.உச்ச நீதிமன்ற கெடு முடியும் நிலையில், நிலுவை தொகையை அனில் அம்பானி தருவாரா அல்லது சிறைக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, எரிக்சன் நிறுவனத்துக்கு, 453 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.நெருக்கடியான நேரத்தில், அனில் அம்பானி கொடுக்க வேண்டிய, 453 கோடி ரூபாயை, அவருக்காக, அவரது மூத்த சகோதரர், முகேஷ் அம்பானி செலுத்தியுள்ளார்.'ரிலையன்ஸ்' குழும நிறுவனர் திருபாய் அம்பானி மறைவுக்குப் பின், அவரது மகன்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானி இடையே பிளவு ஏற்பட்டது. பல ஆண்டுகளாக, இரு குடும்பத்தினரிடையே, சுமுகமான உறவு இல்லை.இந்நிலையில், கடந்த கால கசப்பை மறந்து, நெருக்கடியான நிலையில் பணம் கொடுத்து உதவிய, சகோதரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டாவுக்கு, அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201913:54:42 IST Report Abuse
தமிழ்வேல் நாடகம் ... முடிவிற்கு வந்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X