ஆஹா என்ன ஒரு மாற்றம்!| Dinamalar

ஆஹா என்ன ஒரு மாற்றம்!

Added : மார் 19, 2019
  ஆஹா என்ன ஒரு மாற்றம்!

ஆஹா என்ன ஒரு மாற்றம்!
கடந்த லோக்சபா தேர்தலில், டீக்கடைக்காரராக இருந்த மோடி, இந்த தேர்தலில், காவலாளியாக மாறி விட்டார்; ஆஹா... ஐந்தாண்டு கால, பா.ஜ., ஆட்சியில் என்ன ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதெல்லாம் சரி; டீக்கடைக்காரர் என்ன ஆனார்?மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்


இப்படி பண்றீங்களே!



நாட்டில், வேலைவாய்ப்பின்மை, வறுமை, நோய் பாதிப்பு என, எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, பா.ஜ.,வினர், புல்வாமா தாக்குதலுக்கு பின், தேச பாதுகாப்பு தொடர்பான விஷயத்தை வைத்து, தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்; இப்படி பண்ணலாமா?சசி தரூர்மூத்த தலைவர், காங்கிரஸ்


நாங்கள் தான் முன் மாதிரி!


உத்தர பிரதேசத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒரு சிறு வன்முறை சம்பவம் கூட நிகழவில்லை. இந்த விஷயத்தில், நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு, நாங்கள் தான் முன் மாதிரியாக திகழ்கிறோம். இதை நினைக்கும்போது, ரொம்ப பெருமையாக உள்ளது.யோகி ஆதித்யநாத்உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X