அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவனம் தேவை!

Added : மார் 19, 2019
Advertisement

உடுமலை : அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினத்தை துல்லியமாக கண்காணித்து, பணம், பரிசுப்பொருட்கள் தேர்தலுக்கு பயன்படுத்துவதையும், தடுக்க வேண்டும் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி லோக்சபா தொகுதியிலுள்ள, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை சட்டசபை தொகுதிக்கு, தேர்தல் செலவின பார்வையாளராக பத்ரிநாத் சர்மாவை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், பணம் கொண்டு செல்வதை தடுக்கவும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, மூன்று பறக்கும் படை, மூன்று நிலையான கண்காணிப்புக்குழு, இரண்டு வீடியோ கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளன.நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படையினர் வாகனங்களில், பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் ஆய்வு செய்து வருகின்றனர்.வீடியோ கண்காணிப்பு குழுவினர், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளையும், தேர்தல் விதி மீறல்களையும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், கட்சிகள், வேட்பாளர்களின் செலவின கண்காணிப்பு குழு, வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து, அறிக்கை அனுப்பும் குழு என அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. அவற்றின், செயல்பாடுகளை தேர்தல் செலவின பார்வையாளர் நேற்று ஆய்வு செய்தார்.கோட்டமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினரின் பணியை ஆய்வு செய்த அவர், வாகன சோதனைகளை, நோட்டில் வாகன எண்களுடன் பதிவு செய்ய வேண்டும். வேறு பகுதியில் பணம், பரிசு பொருட்களுடன் சிக்கினால் எங்கிருந்து சென்றது என கண்காணிக்க முடியும். எனவே, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் வீடியோ ஆவணமாக பதிவு செய்வதோடு, தனியாக நோட்டில் அனைத்து விவரங்களையும் ஆவணமாக பதிவு செய்ய வேண்டும். பணம், பரிசுப்பொருட்கள் தேர்தலுக்கு பயன்படுத்துவதையும், தடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.தேர்தல் பணிகளில் 'சுறுசுறு'லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, சட்டசபை தொகுதி வாரியாக, 10 நாட்களுக்கு முன், ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
அவற்றை எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்து, மண்டல அலுவலர்கள், வேட்பாளர்கள் பிரதிநிதிகள் முன்னிலையில், 'பேலட்' பேப்பர் பொருத்தும் பணி மற்றும் ஓட்டுச்சாவடி பொருட்களை பிரித்து, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் அனுப்பும் பணி நடக்கும். இப்பணிக்கு, அரசு கலைக்கல்லுாரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.அதனை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.அலுவலர்களுக்கு பயிற்சிஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, ஓட்டுச்சாவடி, இயந்திரங்கள் தயார்படுத்துதல், ஒவ்வொரு நிலை அலுவலருக்கான பணிகள் குறித்து, தேர்தலுக்கு முன் பயிற்சி அளிக்கப்படும்.ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இந்த தேர்தலில், எல்.இ.டி., திரை மூலம், பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, ஜி.வி.ஜி., கல்லுாரி தேர்வு செய்யப்பட்டு, அதனையும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X