அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வாக்குறுதி!நீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு, இரு , கட்சிகளும், வாய்ஸ்

'வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மாதந்தோறும், 1,500 ரூபாய் வழங்கும், அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தை, நாடு முழுவதும் செயல்படுத்த, மத்திய அரசை வலியுறுத்துவோம். நீட் தேர்வு ரத்து, கல்வி மற்றும் விவசாயக் கடன் சுமையை தீர்க்கும் வகையில் உறுதியான திட்டம் செயல்படுத்தப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று லோக்சபா தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. அதன் தமிழ் பிரதியை, கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் வெளியிட, முதல்வர், இ.பி.எஸ்., பெற்றார். ஆங்கில பிரதியை, முதல்வர் வெளியிட, துணை முதல்வர் பெற்றார்.

தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்:


* வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு, மாதந்தோறும், 1,500 ரூபாய் வழங்கும், அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
* காவிரி - கோதாவரி நதி நீர் இணைப்பு திட்டம், விரைவாக நடைமுறைப் படுத்தப்படும்
* பெட்ரோலிய பொருட்களின் விலையை, மத்திய அரசே நிர்ணயம் செய்யவும், சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீடுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்
* மாணவ - மாணவியர், வங்கிகளில் பெற்றுள்ள, கல்விக் கடன் ரத்து செய்யப்படும்
* விவசாயிகளின் கடன் சுமையை தீர்க்கும் வகையில், உறுதியான திட்டம் செயல்படுத்தப் படும்
* கல்வி, பொதுப் பட்டியலில் இருந்து, மாநில பட்டியலுக்கு மாற்றப்படும். 'நீட்' தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு, விலக்கு அளிக்க வேண்டும்
* தனியார் துறை வேலை வாய்ப்புகளிலும், இடஒதுக்கீடு வழங்க, புதிய சட்டம் இயற்றப்படும்
* இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறும், தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீட்டை பெறும் வகையில், அவர்களின் ஜாதி சான்றிதழ்களில் மாற்றமின்றி மதம் மாறவும், சலுகைகள் பெறவும், புதிய சட்டம் இயற்றப்படும்
* ராஜிவ் கொலை வழக்கில், ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முயற்சி எடுக்கப்படும்
* சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாக்க, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என, மத்திய அரசை வலியுறுத்துவோம்
* நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாக, தமிழ் அறிவிக்கப்படும். காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப் பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப் படும்
* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
* மீனவர் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணப்படும்
* பள்ளி இறுதி வகுப்பு,

பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு முடித்த இளைஞர்கள் அனைவருக்கும், வேலை கிடைக்கும் வரை, மாதாந்திர உதவித் தொகையாக, கல்வித் தகுதிக்கேற்ப, 2,000 ரூபாய் வரை வழங்கப்படும்
* கோவை, மதுரை,துாத்துக்குடி, திருச்சி, சேலம் விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு, நவீனமயமாக்கப்படும்
* மாநில அரசை கலைக்க உதவும், அரசியலமைப் பின், 356வது பிரிவை நீக்க வலியுறுத்தப்படும். உச்ச நீதிமன்றத்தின், மண்டல அளவிலான கிளை, தமிழகத்தில் ஏற்படுத்தப்படும்
* வருமான வரி விலக்கை, எட்டு லட்சம் ரூபாயாகவும், நிலையான கழிவினை, 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை எல்லாம் செயல்படுத்த, மத்திய அரசை, அ.தி.மு.க., வலியுறுத்தும்

மாணவருக்கு இலவச ரயில் பாஸ் தி.மு.க., தேர்தல் அறிக்கை


'நீட்' தேர்வு, கல்வி மற்றும் பயிர் கடன் ரத்து; கேபிள், 'டிவி' கட்டணம், சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகள்;

அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டம், மாணவர்களுக்கு இலவச ரயில் பயணம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் என, 43 சிறப்பு அம்சங்கள், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
லோக்சபா தேர்தல் மற்றும், சட்டசபை இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை, சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று வெளியிட்டார். அதில், இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:
* தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்கள், தமிழில் செயல்படத்தக்க வகையில், இணை ஆட்சிமொழியாக, தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்படும்
* வேளாண்மை துறைக்கு, தனி பட்ஜெட், லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும்
* மத்திய அரசின், மொத்த வரி வருவாயில், 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்; பாரபட்சம் இல்லாமல், நிதி பங்கீடு செய்யப்படும்
* மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் அமல்படுத்தப்படும். தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம்,ரூ 8,000 பாயாக நிர்ணயிக்கப் படும்
* காஸ் சிலிண்டருக்கானமானியத் தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை மாற்றப் பட்டு, முன்பிருந்தது போல, சிலிண்டர் விலை குறைக்கப்படும்
* வருமான வரி வரம்பு,

ஐந்து லட்சத்தில் இருந்து, எட்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பெண்களுக்கு, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். ஓய்வூதியத்துக்கு, முற்றிலும் விலக்கு அளிக்கப்படும்
* ஜி.எஸ்.டி., வரி விகிதம், உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்
* சிறு, குறு விவசாயிகளின், அனைத்து வகை பயிர் கடன்களும், முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்
* பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு சென்று வரும் அனைத்து மாணவர்களுக்கும், இலவச ரயில் பயண சலுகை வழங்கப்படும்* பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள, ஒரு கோடி இளைஞர்கள், சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்
* வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தில், ஒரு பெண்ணுக்கு, சிறு தொழில் துவங்க, 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
* பாலியங்கள் குற்றங்களை தடுக்க, உரிய சட்டம் இயற்றப்படும்
* காவிரி டெல்டா பகுதிகளில், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் அறிவிக்கப்படும். 'மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ' போன்ற, திட்டங்களை கைவிட வலியுறுத்தப்படும்
* ஊரக வேலை உறுதி திட்டத்தில், விவசாய தொழிலாளர்களுக்கு, தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப் படும். குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை, 150 ஆக உயர்த்தப்படும்
* பேரறிவாளன் உட்பட, ஏழு பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர்
* தமிழகத்தில், பட்டாசு தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்
தி.மு.க., ஒரு தொகுதிக்கு ஒன்று எனக் கணக்கிட்டு, இடைத்தேர்தல் வாக்குறுதிகளையும், அள்ளி வீசியுள்ளது. அவை:
* ஆண்டிபட்டி தொகுதியில், ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்; வைகை அணைதுார்வாரப்படும்
* அரூர் தொகுதியில், தர்மபுரி - அரூர் சாலை, மொரப்பூர் வழியாக, நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும்
* மானாமதுரை தொகுதியில், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்
* பெரியகுளம் தொகுதியில், கும்பக்கரை அருவியில், புதியதாக வவ்வால்துறை அணைக்கட்டு கட்டப்படும்
* ஒகேனக்கல் கூட்டுக்

குடிநீர் திட்டம், வேலுார் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்
* பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தரம் உயர்த்தப்பட்டு, பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படும்
* பரமக்குடி தொகுதியில், ராமநாதபுரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராமநாதபுரம் - துாத்துக்குடி சாலைகள், நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்
* சோளிங்கர் தொகுதியில், வேலுார் கூட்டு குடிநீர் திட்டம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி வரை விரிவாக்கம் செய்யப்படும்
* திருப்போரூர் தொகுதியில், வேளச்சேரி வரை இயக்கப்படும் மாடி ரயில் திட்டம், மாமல்லபுரம் வரை நீட்டிக்கப்படும், கோவளம் - கேளம்பாக்கம் சாலை சந்திப்பில், மேம்பாலங்கள் கட்டப்படும்
* தஞ்சாவூர் தொகுதியில், கோளரங்கத்துடன் கூடிய, நவீன அறிவியல் மையம் அமைக்கப்படும்
* நிலக்கோட்டை தொகுதியில், அரசு பொதுமருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டு, தரம் உயர்த்தப்படும்
* ஆம்பூர் தொகுதியில், சுற்றுச்சாலை அமைக்கப்படும்
* சாத்துார் தொகுதியில், நிலையுரூர் - கம்பிக்குடி, சென்னம்பட்டி கால்வாய் திட்டங்கள் சீரமைக்கப்படும்
* விளாத்திகுளம் தொகுதியில், நாகலாபுரத்தில் மூடப்பட்டுள்ள,
பத்திரப்பதிவு அலுவலகம், மீண்டும் திறக்கப்படும்
* திருவாரூர் தொகுதியில், இயற்கை உர தொழிற்சாலை துவக்கப்படும்
* ஓசூர் தொகுதியில், வர்த்தக மையம் அமைக்கப்படும்
* பெரம்பூர், பூந்தமல்லி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில், பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்
* அரவக்குறிச்சி தொகுதியில், புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்
* ஒட்டப்பிடாரம் தொகுதியில், நீதிமன்றம் அமைக்கப்படும்.

நல்ல நேரம்


அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. இரண்டு கட்சிகளும், நல்ல நேரம் பார்த்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

நேற்று காலை, 9:00 மணியிலிருந்து, 10:30 மணி வரை, எமகண்டம். அதனால், அந்த நேரத்தை, இரு கட்சிகளும் தவிர்த்தன. பின், காலை, 10:30 மணியிலிருந்து, 11:30 மணி வரை, நல்ல நேரம் என்பதால், இரு கட்சிகளும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.


Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-மார்-201922:44:23 IST Report Abuse

Mani . Vஅடேய் அதிமுக மாக்கான்களா இப்பொழுதும் நீங்கள்தான் பதவியில் இருக்கிறீர்கள் (எது அது அடிமை ஆட்சியா?) உங்களால் இப்பொழுதே ஏன் அதையெல்லாம் கழட்ட முடியவில்லை? ஒன்லி வாய்ஸ், நோ ஆக்க்ஷன். யூஸ்லெஸ் பெல்லோஸ்.

Rate this:
J sundarrajan - Coimbatore,இந்தியா
20-மார்-201917:06:09 IST Report Abuse

J sundarrajanஇனிமேல எவன் வாங்கின கடன திருப்பி கட்டப்போறான்.நம்ப அரசியல்வாதிகளின் மற்றுமோர் திருப்பணி.வெளங்கிடும்

Rate this:
Divahar - tirunelveli,இந்தியா
20-மார்-201916:17:42 IST Report Abuse

Divaharநாலு லட்சம் கோடி கடனை 5 லட்சம் கோடி ஆக்குவோம் என சொல்லலாமே

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X